தட்கல் டிக்கெட்டில் பயணம் செய்ய இனி அடையாள சான்று தேவையில்லை; இந்திய ரெயில்வே அறிவிப்பு

தட்கல் டிக்கெட்டில் பயணம் செய்ய இனி அடையாள சான்று தேவையில்லை; இந்திய ரெயில்வே அறிவிப்பு

தட்கல் டிக்கெட்டில் பயணம் செய்ய இனி அடையாள சான்று தேவையில்லை; இந்திய ரெயில்வே அறிவிப்பு

மும்பை,

தட்கல் முறையில் ரெயில்களில் பயணம் செய்யும் போது பயணிகள் வைத்திருக்க வேண்டிய அடையாள சான்று குறித்த விதிமுறைகளை இந்திய ரெயில்வே மாற்றியுள்ளது. 

புதிய விதிமுறைகளின் படி, அவசர நேரங்களுக்கும், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பும் செய்யப்படும் தட்கல் டிக்கெட் முன்பதிவில் இனி அடையாள சான்றை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும், ஆன்லைனில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யும் போதும் அடையாள சான்றை சமர்பிக்க வேண்டிய தேவையில்லை, ஒருவேளை பலர் ஒரே குழுவாக தட்கல் முறையில் பயணம் செய்தால் அவர்களில் ஒரு பயணி மட்டும் இந்திய ரெயில்வேயால் ஏற்றுக்கொள்ளப்படும் அடையாள சான்றுகளில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும். 

மேற்கு ரெயில்வே அறிவித்துள்ள அடையாள சான்றுகளின் விபரம் பின்வருமாறு:- 
 

  1. வாக்காளர் அடையாள அட்டை
  2. பாஸ்போர்ட்
  3. பான் கார்டு
  4. டிரைவிங் லைசென்ஸ்
  5. ஆதார் கார்டு
  6. மத்திய, மாநில அரசுகள் வரிசை எண்ணுடன் கூடிய போட்டோ ஐ.டி. கார்டு
  7. பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் அடையாள அட்டை
  8. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பாஸ்புக், போட்டோவுடன் கூடிய கிரெடிட் கார்டு


இதுதவிர, வரிசை எண்ணுடன் கூடிய மாவட்ட நிர்வாகம், பஞ்சாயத்து நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் அடையாள அட்டைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்