சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை...
தமிழ் உலகம்,
216
சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை...
சென்னை: சென்னையில் திநகரில் உள்ள தனியார் நிறுவனம் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று (மார்ச் 14) அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அமலாக்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர். அரசியல்வாதிகள் முதல் தொழிலதிபர்கள் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை திடீரென சென்னையில் திநகரில் உள்ள தனியார் நிறுவனம் உள்ளிட்ட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்....
தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அத்துடன் கொளத்தூர், அண்ணா நகர், திருவான்மியூர், மயிலாப்பூர் முகப்பேர் உள்ளிட்ட மொத்தம் 12 இடங்களில் சோதனை நடக்கிறது.