``வாழ்வு கொடுத்த இரட்டை இலைக்கு ஓ.பி.எஸ்ஸின் மனசாட்சி வாக்கு கேட்டுள்ளது..!” - ஆர்.பி.உதயகுமார்

``வாழ்வு கொடுத்த இரட்டை இலைக்கு ஓ.பி.எஸ்ஸின் மனசாட்சி வாக்கு கேட்டுள்ளது..!” - ஆர்.பி.உதயகுமார்

``வாழ்வு கொடுத்த இரட்டை இலைக்கு ஓ.பி.எஸ்ஸின் மனசாட்சி வாக்கு கேட்டுள்ளது..!” - ஆர்.பி.உதயகுமார்
 
இரு தினங்களுக்கு முன்னர், ஓ.பி.எஸ் பிரசாரத்தின் போது தவறுதலாக பலாப்பழத்துக்கு பதிலாக இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என சொல்லிவிட்டார். பின்னர் பழக்க தோஷம் என்றவர் மீண்டும் பலாப்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பார்வர்ட் பிளாக் தலைவர் மூக்கையாத்தேவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
 
பின்பு ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கச்சத்தீவு பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்தபோது, அதற்கு எதிராக குரல் கொடுத்ததில் முக்கியமானவர் மூக்கையாத்தேவர்.
 
கச்சத்தீவை மீட்க பல்வேறு வழக்குகளை முன்மாதிரியாக எடுத்துரைத்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடுத்தார். கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்பது அதிமுகவின் கொள்கை முடிவு. இந்தியாவின் ஒரு பகுதியான அதை தாரை வார்த்ததை ஏற்றுக்கொள்ள முடியாது, மீட்டெடுக்க வேண்டும் என்பதில் ஜெயலலிதாவின் வழியில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்,
 
இரட்டை இலைதான் தனக்கு வாழ்வும், அடையாளமும் கொடுத்தது என்பதால்தான், ஒரு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இரட்டை இலை சின்னத்தை தூக்கி எறிந்து விட ஓபிஎஸ் நினைத்தாலும், அவருடைய மனசாட்சி இரட்டை இலைக்கு வாக்கு கேட்டுள்ளது. இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுள்ள்ளார்.
 
ஒரு நிலைப்பாடை உடனடியாக மாற்ற முடியாது, அது மனித இயல்புக்கு எதிரானது. பதவிக்காக எந்த நிலைப்பாடை எடுத்தாலும், தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை, மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றார்.
 
இரு தினங்களுக்கு முன்னர், ஓ.பி.எஸ் பிரசாரத்தின் போது தவறுதலாக பலாப்பழத்துக்கு பதிலாக இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என சொல்லிவிட்டார். பின்னர் பழக்க தோஷம் என்றவர் மீண்டும் பலாப்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்