அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரும் செந்தில் பாலாஜி - இன்று விசாரணை!
தமிழ் உலகம்,
191
அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரும் செந்தில் பாலாஜி - இன்று விசாரணை!
அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரும் செந்தில் பாலாஜி - இன்று விசாரணை
அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
இந்த குற்றம் மூலம் ஈட்டிய பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையினர், செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, தனக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை (பிப்ரவரி 15) எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மறு ஆய்வு மனு, நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் நாளை 17 வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது