சீனாவில் இருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்ய 2017 ஜூன் வரை தடை

சீனாவில் இருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்ய 2017 ஜூன் வரை தடை

சீனாவில் இருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்ய 2017 ஜூன் வரை தடை

பால் பொருட்களை உற்பத்தி செய்வதிலும், அவற்றை நுகர்வதிலும் உலகில் முதலிடத்தில் இருந்து வருகிறது இந்தியா. 2014-15-ம் ஆண்டுகளில் மட்டும் 146.31 மில்லியன் டன்களாக பால் பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த 2008 செப்டம்பர் மாதம் முதல்முறையாக சீனாவில் இருந்து பால் சம்பந்தப்பட்ட அனைத்து உப பொருட்களையும் இறக்குமதி செய்ய தடை விதித்திருந்தது இந்தியா. சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பால் பொருட்களில் மெலாமின் எனும் ஆபத்தான ரசாயனம் இருப்பதாக கூறி தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ரசாயனம் பிளாஸ்டிக் மற்றும் உரங்களில் கலக்கப்படுவதாகும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவில் இருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியது. நேற்றுடன் இந்த தடைக்காலம் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த தடையை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி வரை நீட்டித்துள்ளது இந்தியா.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்