மச்சான் ! என்னமா ஏமாத்திட்டாடா !

மச்சான் ! என்னமா ஏமாத்திட்டாடா !

உலகமே “பூச்சி மருந்து”ன்னு சொன்னாலும் வெறப்பா நின்னு, ‘கோக், பெப்சி குடிக்கறதுதான் ஸ்டைல் நம்பர் ஒன்!’ என்று ஸ்டெடியாய் நிற்பவர்கள்தான் பலர். சமூக அவலங்களில் இவர்கள் சிக்கிக் கொள்வது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

இந்தியாவின் வல்லரசுக் கனவில் துண்டு போடும் வர்க்கத்திடம், அவர்கள் போகும் பாதையை குறித்து நாம் எச்சரித்தால், “எங்களுக்கேவா! நாங்….கல்லாம் நாலும் தெரிஞ்சவங்க, பாருங்க எங்க கையில ஃபேஸ்புக், TAB, நெட்டு…. பாசிட்டிவ் அப்ரோச் பண்ணுங்க பாஸ்!” என்று பிரமிப்பூட்டுகிறது.

“உலகம் கருவிகளால் உணரப்படக்கூடியது அல்ல, கருத்துக்களால் ஆராயப்பட வேண்டியது” என்று வாயெடுத்தால் “வந்துட்டாருப்பா! வள்ளுவரு!” என்று நக்கலடிக்கும் இந்த மாடர்ன் மண் குதிரைகளை அதே ரூட்டில் காலி செய்திருக்கிறார்கள் இரண்டு பெண்கள்.

நுனி நாக்கு ஆங்கிலம், மேற்கத்திய உடல் மொழி, நடை, உடை, பாவனைகளே நம்மை மூட்டலாக்க போதும் என்று   சென்னையின் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி வேலை வாய்ப்பு  முகாம் நடத்தி  பல ஆயிரங்களைச் சுருட்டியுள்ளோம் என்று  டெல்லி நொய்டாவைச் சேர்ந்த சவுமியா, புதுச்சேரியைச் சேர்ந்த பீனா இருவரும் மார் தட்டி கூறுகின்றனர்.

நடந்தது இதுதான்.

சவுமியா, சபானா இருவரும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு புதுடெல்லியை தலைமை இடமாக கொண்டு இயங்கும் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தின் பெயரில் பொறியியல் கல்லூரிகளுக்கு போலியான மின்னஞ்சல் அனுப்பி , கல்லூரிகளில் அனுமதி வாங்கி, போலியான வேலைக்கான தேர்வுகள் நடத்தி  “நாங்கள் டெல்லியை தலைமையகமாகக் கொண்ட பிரபல சாப்ட்வேர் நிறுவனம், எங்களுடைய பெங்களூர், ஐதராபாத், சென்னை கிளைகளில் உங்களுக்கு உடனடி சொர்க்கம்” என்று சொல்லி மாணவர்களிடம் ரொக்கம் ரூ 1,500 -ஐ கறந்துள்ளனர். கடைசியாக, ஒரு கல்லூரியில் சந்தேகம் வந்து சில மாணவர்கள் புகார் செய்ய இப்போது பிடிபட்டுள்ளனர்.

“எங்களுடைய இங்கிலீஷ் ஸ்டைல், அணுகுமுறையிலேயே பல கல்லூரிகள் அனுமதியளித்தன. யாருக்கும் சந்தேகம் வரவில்லை” என்று வாக்குமூலம் தந்திருக்கிறார்கள் இருவரும்.

வாழ்க நம் தனியார் கல்லூரிகள்... வளர்க  அவர்களின் சாதனைகள்

படம் : நன்றி தினகரன்

 
 

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்