ஒரு சூறாவளியின் பயணம் விழித்துக்கொள்ளுமா தமிழக அரசு?

ஒரு சூறாவளியின் பயணம் விழித்துக்கொள்ளுமா தமிழக அரசு?

ஒரு சூறாவளியின் பயணம் விழித்துக்கொள்ளுமா தமிழக அரசு?
 
வானிலைத்துறை தொடர்ந்து அளித்த எச்சரிக்கைகளை அதற்குரிய முக்கியத்துவத்துடன் தமிழக அரசாங்கம் ஆய்வு செய்ய தவறியது. பேரிடர் நடவடிக்கை குழுக்களும் செயல்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக சென்னை, கடலூர் உட்பட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.இயற்கை மீதுபழிபோட்டு தப்பிக்க எண்ணிய அதிமுக அரசாங்கத்தை மக்களின் கோபம் தனிமைப்படுத்தியது. இதோ! மீண்டும் ஒரு முறை சென்னைஉட்பட தமிழகத்தின் வடக்கு கடற்கரையோரப் பகுதிகள் கனமழையை சந்திக்கவாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை எச்சரித்துள்ளது. இந்த கனமழை டிசம்பர் 1ம் தேதி தமிழகத்தில் துவங்கும் எனவும்வானிலை அறிக்கை கணித்துள்ளது. “வெள்ளத்தை உருவாக்கக்கூடிய மழை” பெய்யும் என இந்திய வானிலைத்துறை மட்டுமல்ல; அமெரிக்க வானிலைத் துறையும் ஐரோப்பிய வானிலைத்துறையும் ஒரே மாதிரியாக மதிப்பீடு செய்துள்ளன.தமிழகத்தின் வடக்கு கடற்கரை அதாவது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் இலங்கையின் கிழக்குபகுதியும் மிகக் கூடுதலான மழையை பெறும் எனவும் இந்த மழை டிசம்பர் 5ம்தேதிவரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க வானிலை அறிக்கை கூறுகிறது.
 
ஐரோப்பிய வானிலை அறிக்கை, இந்தகனமழை எப்படி உருவாகும் எனவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. பசிபிக்கடலின் வடமேற்கு பகுதியில் இன்-ஃபா(ஐn-குய) எனும் சூறாவளி உருவாகியுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்தசூறாவளி வடக்கு – வடமேற்கு திசையில் பயணித்துக் கொண்டுள்ளது. பிலிப்பைன்சின் கிழக்கு பகுதியை அடைந்தவுடன் இந்த சூறாவளி வடக்கு – வடகிழக்கு திசையில் ஜப்பானை நோக்கி பயணிக்கும். இந்த சூறாவளி சுழற்சியின் ஒருசிறுபகுதி தென்சீன கடலுக்குள் நுழையும். இது தாய்லாந்து வளைகுடா வழியாக அந்தமான் கடல்பகுதிக்கு வியாழன் அல்லது வெள்ளி(நவம்பர் 27 அல்லது 28) அன்று வந்துசேரும்.இது அந்தமான் கடல்பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது. இது தமிழக கடற்கரையோரம் குறிப்பாக சென்னை பகுதியில் சுழலும். இது பின்னர் ஆந்திர நிலப்பகுதியை கடக்கும். இதன் காரணமாக தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் குறிப்பாக சென்னையில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.ஐரோப்பிய வானிலை அறிக்கையை ஒட்டி இந்திய வானிலை அறிக்கையும் கனமழை வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கனமழை நவம்பர் இறுதி முதல்டிசம்பர் முதல் வாரம் வரை தொடர்ச்சியாகவோ அல்லது இடைவெளி விட்டோ பெய்யும். இந்த தாழ்வு மண்டலம் வெள்ளம் உருவாக்கும் மழையை (கடடிடினiபே சயiளே) விளைவிக்கும் எனவும் வானிலை அறிக்கை கூறுகிறது.ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மழை எச்சரிக்கையை வானிலைத்துறை வெளியிட்டுள்ளது. கடந்த முறை உதாசீனப்படுத்தியது போல அல்லாமல் இந்தமுறையாவது தமிழக அரசாங்கம் விழித்துக்கொள்ள வேண்டும். மக்கள் தமது உடமைகளையும் உயிரையும் இழக்காமல் இருப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். இதனை அதிமுக அரசாங்கம் செய்யுமா என்பதே மிகப்பெரிய கேள்வி!

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்