புகழ் பெற்ற மோனார்க் வகை வண்ணத்துப் பூச்சிகளின் வருடாந்திர இடம் பெய்வு தொடங்கியது

புகழ் பெற்ற மோனார்க் வகை வண்ணத்துப் பூச்சிகளின் வருடாந்திர இடம் பெய்வு தொடங்கியது

புகழ் பெற்ற மோனார்க் வகை வண்ணத்துப் பூச்சிகளின் வருடாந்திர இடம் பெய்வு தொடங்கியது
 
புகழ் பெற்ற மோனார்க் வகை வண்ணத்துப் பூச்சிகளின் வருடாந்திர இடம்பெய்வு கடந்த சனிக்கிழமை தொடங்கியது. ஆரஞ்சி மற்றும் கருப்பு வண்ணங்களால் மேலிரும் மோனார்க் வகை வண்ணத்துப் பூச்சிகளுக்கு உலக முழுவதிலும் ரசிகர்கள் ஏராளம். இவ்வகை பூச்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை கூட்டம்கூட்டமாக லட்சக்கணக்கில் இடம் பெயரும் வழக்கத்தை கொண்டுள்ளன. அதன்படி இந்த வண்ண தேவதைகள் கடந்த சனிக்கிழமை முதல் தங்கள் நெடும் பயணத்தை தொடங்கியுள்ளன.
 
அவை தற்போது மத்திய மெக்சிகோ மற்றும் கலிபோர்னியா பகுதிகளில் வர தொடங்கியுள்ளன. இவற்றை கண்டு ரசிக்கும் நோக்கில் அப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் குவிந்து வருகின்றனர். மரங்க ளில் கொத்து கொத்தாய் பூக்களை போலவே தொங்கி கொண்டிருக்கம் வண்ணத்துப்பூச்சிகளை ஆய்விட பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் அங்கு படையெடுத்துள்ளனர்.
 
செடிகள் மற்றும் மரங்களில் பயன்படுத்தப்படும் பூச்சி கொல்லிகள் மற்றும் மனிதர்கள் தலையீடுகள் காரணமாக வண்ணத்துப் பூச்சிகளின் இடப்பெயர்வு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாகவும் உயிரியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்