துபாயில் பிரம்மாண்ட மலர் பூங்கா மீண்டும் திறப்பு ! குவிந்த சுற்றுலா பயணிகள்!

துபாயில் பிரம்மாண்ட மலர் பூங்கா மீண்டும் திறப்பு ! குவிந்த சுற்றுலா பயணிகள்!

துபாயில் பிரம்மாண்ட மலர் பூங்கா மீண்டும் திறப்பு ! குவிந்த சுற்றுலா பயணிகள்!
 
வளைகுடா என்றதும் பலருக்கு நீண்ட பாலைவனம் நினைவுக்கு வரும் ஆனால் மலர்களும், மரங்களும் நினைவிற்கு வரும் வகையில் வளைகுடா நாடுகளின் நகரங்களில் ஒன்றான துபாயில் மரம், செடிகளோடு இயற்கை சூழலை உருவாக்க முயற்சிகள் பல மேற்கொண்டு இது குளிர் பிரதேசமா என நினைக்க செய்யும் வகையில் அழகிய‌ தோட்டங்களை உருவாக்குகின்றனர்.
 
இந்நிலையில் 2013ம் வருடம் சுமார் 72,000 சதுர அடி பரப்பளவில் வித விதமான‌ பூக்களைக்கொண்டு மிராக்கிள் கார்டன் என்ற பெயரில் துபாயில் பிரம்மாண்ட பூந்தோட்டம் உருவாக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. கோடை காலத்தையோட்டி தற்காலிகமாக மூடப்பட்ட துபாயில் உள்ள பிரம்மாண்ட மலர் பூங்கா நேற்று மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. இதற்கான துவக்க நிகழ்ச்சி பூங்கா அரங்கில் நடைபெற்றது. முதல் நாளிலேயே ஏராளமானோர் குவிந்தனர். இப்பூங்கா வருடத்தில் ஆறுமாத காலம் செயல்படும்.
 
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 4.5 கோடிக்கும் மேற்பட்ட மலர்களோடு இப்பூங்கா ஏற்படுத்தப்பட்டு பல்வேறு அழகிய வடிவங்களோடு மலர் அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் லட்சக்கணக்கான மக்கள் இப்பூங்காவிற்கு வருகை தந்து பூக்களை ரசித்து சென்றனர். உலகின் மிகப்பெரிய மலர் பூங்காக்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்