குடியுரிமை திருத்தச் சட்டம்... அஸ்ஸாமில் இன்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு!

குடியுரிமை திருத்தச் சட்டம்... அஸ்ஸாமில் இன்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு!

குடியுரிமை திருத்தச் சட்டம்... அஸ்ஸாமில் இன்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு!
 
மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு சில நாள்களே இருக்கும் சூழலில், நான்கு ஆண்டுகளாக விதிகள் வகுக்கப்படாமல், அமல்படுத்தப்படாமலிருந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை பா.ஜ.க அரசு இன்று நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கிறது. முன்னதாக, 2019-ல் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும், அதே ஆண்டில் டிசம்பரில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை சட்டமாக நிறைவேற்றியது. இந்தச் சட்டமானது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் அகதிகளாக நுழைந்த இந்து, பௌத்தம், சமணம், பார்சி, கிறித்தவம், சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குகிறது.
 
குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி, மேற்குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள், மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து 2014, டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறி குறைந்தது 5 ஆண்டுகள் இங்கு வசித்திருந்தாலே குடியுரிமை வழங்கப்படும். ஆனால், இங்குதான்... முஸ்லிம் அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்று பா.ஜ.க அரசு எங்கும் குறிப்பிடவில்லை.
 
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அஸ்ஸாம் மாநிலத்தில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தின் பல பகுதிகளில் மாணவர் அமைப்புகள் நேற்று வெளியான சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 16 எதிர்க்கட்சிகள் இணைந்து மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டங்களால் அஸ்ஸாம் மாநிலத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டார்ச் லைட் பேரணி, சத்தியாகிரகம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக அஸ்ஸாம் மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளன.
 

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்