இன்று முதல் வேட்புமனு தாக்கல்!

இன்று முதல் வேட்புமனு தாக்கல்!

இன்று முதல் வேட்புமனு தாக்கல்!
 
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாக அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, முதல்கட்ட தேர்தல் நாளான ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. அதன்படி, தமிழகம், புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
 
அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். மனுதாக்கல் செய்யும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வேட்பாளரின் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதேபோல, மனுதாக்கலின்போது, வேட்பாளர் உட்பட5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மனுதாக்கல் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும். மார்ச் 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மார்ச் 30-ம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்ப்படும்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்