என் ஈழம்! என் தமிழ்! என் தேசம் ! – கமால் !!
கள்ளமில்லா எங்கள் வெள்ளைப் புன்னகை எங்கே?
களங்கமில்லா எங்கள் பால் நிலா எங்கே?
கவிதை பாடிய கருங்குயில்கள் எங்கே?
கன்னம் சிவந்த கன்னியர்கள் எங்கே?
கனிவாய் மலர்ந்த காரிகை எங்கே?
கனியன் தோட்டத்துக் கனிகள் எங்கே?
கவிக்குயில் பாடிய பாடல் எங்கே?
கண்ணில் பிறந்த கனவு எங்கே?
கனவில் வளர்த்த செழுமை எங்கே?
காவல் இல்லா காரிருள் எங்கே?
கையில் மிதந்த கார்முகில் எங்கே?
பொக்கை வாய்க் கிழவிகளின்
படுக்கை நேர பாலர் கதைகள் எங்கே?
கள்ளி காட்டின் கீதம் எங்கே………………..?
காலின் கீழே கன்னி வெடிகள்…
தலைக்கு மேலே ஆயுதப் பறவைகள்…
கண்ணீர் தரித்து, இரத்த மை துரத்தி..
கனவு தேசம் நோக்கி…
காலம் காலமாய் ஒரு பெரும் பயணம்…
தேடிக் கிடைக்குமோ, தேடலில் கரைவோமோ?!
எங்கே என் ஈழம்?! எங்கே என் தமிழ்! எங்கே என் தேசம்!
என்றும் அன்புடன்
“கமால்”