நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்..!

நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்..!

மாதம்தோறும் மீட்டரில் கணக்குப் பார்த்து எழுதிவிட்டுப் போகும் மின்சாரத்துறை ஊழியர்களிடம் “இந்த மாதம் எத்தனை யூனிட் ஆகி இருக்கிறது?” என்று கேட்பது ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வழக்கமான கேள்வி. அதிலிருந்து மின்சார ‘பில்’ அந்த மாதம் எவ்வளவு ஆகும் என்று கணக்கிடுவதற்காகத்தான் அந்தக் கேள்வி. ஆனால், ஒரு யூனிட் மின்சாராத்தில் என்னென்ன செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?
ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து…..

2500 காலன் தண்ணீரை 50 அடி உயரம் பம்ப் செய்யலாம்.

40 வாட் விளக்கை 25 மணி நேரம் எரிக்கலாம்.

60 துண்டு ரொட்டிகளை வாட்டிச் சமைக்கலாம்.

நான்கு பேருக்கு சிற்றுண்டி தயார் செய்யலாம்.

ஆறு காலன் வெந்நீர் போட்டுக் குளிக்கலாம்.

ஆறு மணி நேரம் தரையைப் பாலிஷ் செய்யவோ சுத்தம் செய்யவோ உபயோகிக்கலாம்.

ஒரு தையல் மிஷினை 20 மணி நேரம் ஓட்டலாம்.

ஒரு சலவை மிஷினில் ஆறு பேர்களுடைய உடையை இரண்டு வாரங்களுக்கு வெளுக்கச் செய்யலாம்.

தலைக்கு மேல் சுற்றும் மின் விசிறியை 10 மணி நேரம் உபயோகிக்கலாம்.

180 பவுண்டு வெண்ணை எடுக்கலாம்.

2500 பால் புட்டிகளைக் கழுவலாம்.

இரண்டு காலன் தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.

பத்து பவுண்டு ஐஸ் கட்டி செய்யலாம்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்