சிறுவர்களையும் சினிமா மோகத்தில் தள்ளிவிட வேண்டுமா?

சிறுவர்களையும் சினிமா மோகத்தில் தள்ளிவிட வேண்டுமா?

குழந்தைகள் மனதை பாழாக்கும் சுட்டி டிவி!
குழந்தைகள் பார்க்கும் சுட்டி டிவியில் வரும் பல நிகழ்ச்சிகள், அவர்களின் மனதைக் கெடுப்பதாக உள்ளன.
 
இதற்கு ஒரு உதாரணம் ஜாக்கிசான் என்ற தொடர். இதுவே சினிமா மோகத்தை வளப்பதுதான். தவிர, இந்த தொடரில் வரும் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுப்பவர்கள் வடிவேலு, பிரகாஷ்ராஜ் என நடிகர்களைப்போலவே மிமிக்ரி செய்து பேசுகிறார்கள்.
 
இதெல்லாம் தேவையா.. பெரியவர்களே, சினிமா மோகத்தில் சிக்கியிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இந்த நிலையில், சிறுவர்களையும் சினிமா மோகத்தில் தள்ளிவிட வேண்டுமா?
 
தவிர விளம்பர வருவாய் பெரிய அளவில் வருகிறது என்கிறார்கள். தமிழிலேயே தமழ் கலாச்சாரத்தை பிரதிபலிப்பது போன்ற தொடர்களை எடுக்கலாமே. மேற்கத்திய தொடர்களை அப்படியே மொழியாக்கம் செய்துதான் வெளியிட வேண்டுமா..?
 
சுட்டி டிவி சிந்திக்க வேண்டும்..

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்