உயிரைக் காக்கும் கார உணவுகள்!
இயற்கை உணவு,
1162
காரம் சாப்பிட்டால் உயிரைக் குடிக்கும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
சீனாவில் சுமார் 5 லட்சம் பேரிடம் 7 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம், இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது காரம் செறிந்த உணவை உண்பவர்களின் நீண்ட ஆயுளுக்கு அந்த உணவு வகை உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், புற்றுநோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளிலிருந்து கார உணவுகள் காக்கிறது.
மிளகாயில் இருக்கும் கேப்சைசின் என்ற மூலப்பொருள் நடுத்தர வயதில் ஏற்படும் மரணத்தை தடுக்கவல்லது என்று இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.