விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதல் 50 மணிநேரத்துக்கு தரமான செலவில்லா சிகிச்சை பிரதமர் மோடி

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதல் 50 மணிநேரத்துக்கு தரமான செலவில்லா சிகிச்சை பிரதமர் மோடி

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதல் 50 மணிநேரத்துக்கு தரமான செலவில்லா சிகிச்சை பிரதமர் மோடி அறிவிப்பு

ஒவ்வொரு நிமிடமும் ஒரு சாலை விபத்து, ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு விபத்து சார்ந்த மரணம் என்ற நிலை நீடித்துவரும் இந்தியாவில் சாலை விபத்துக்குள்ளாகும் நபர்களுக்கு முதல் 50 மணி நேரத்துக்கு செலவில்லாமல் தரமான சிகிச்சை அளிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்யும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுகிழமைகளில் வானொலி மூலமாக 'மன் கி பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றி வருகிறார். இம்மாத மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் ஒலிபரப்பானது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெருகிவரும் சாலை விபத்துகள் மற்றும் விபத்து சார்ந்த மரணங்கள் தொடர்பாக கவலை தெரிவித்தார். இதுதொடர்பாக, விரைவில் புதிய சாலை போக்குவரத்து பாதுகாப்பு மசோதா கொண்டு வரப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி, உயிருக்குப் போராடும் நபர்களுக்கு முதல் 50 மணி நேரத்துக்கு செலவில்லாமல் தரமான சிகிச்சை அளிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்யும் என தனது உரையின்போது, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

முதல்கட்டமாக, குர்கான், ஜெய்ப்பூர், வதோதரா, மும்பை, ராஞ்சி, ருங்கான், மயூரா தேசிய நெடுஞ்சாலைகளில் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்