மார்பு சளி, சுவாச பிரச்சினையை போக்கும் யூகலிப்டஸ்
மார்பு சளி, சுவாச பிரச்சினையை போக்கும் யூகலிப்டஸ்
யூகலிப்டஸ் மிக உயரமான மரமாகும். இந்தியாவில் நீலகிரி, ஆனை மலை, பழநி மலைத்தொடர் ஆகிய இடங்களில் வளர்க்கப்படுகிறது. பழங்குடியினரால் பல காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் எண்ணெய். இது சிறந்த நுண்ணுயிர் எதிரியாகும். சாம்பல் நிற சதைப்பற்று கொண்ட இலைகள் மிகுந்த எண்ணெய் சுரப்பிகளைக் கொண்டவை.இலைகளும், வேர்களும் மருத்துவ குண நலன்கள் கொண்டவை.நறுமணம் கொண்ட இலைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய் எளிதில் ஆவியாகக் கூடியது. யூகலிப்டஸ் எண்ணெய் தோல் மற்றும்அழகு பராமரிப்பிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
இதன் எண்ணெய்காகவும், ரெசினிற்காகவும், மரத்திற்காகவும் பெருமளவு பயிரிடப்படுகிறது.உலகிலுள்ள மிக உயரமான மரங்களில் இவ்வகை ஒன்று. இதன் இலைகள் விறைப்பாகவும், தோல் போலவும் பல வடிவங்களில் இருக்கும். இதன் மலர்கள் பம்பர வடிவில் சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் கொத்துக் கொத்தாக இருக்கும்.
கப்பல் கட்ட, தரைபோட, கருவிகள் செய்ய இம்மரங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் பசை போன்ற ரெசின் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிற மருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது. ஒப்பனைப் பொருள்கள் செய்வதிலும், சோப்புகள் தயாரிப்பிலும் உபயோகிக்கப்படுகிறது.
காயங்களில் பாக்டீரியாக்களினால் ஏற்படும் சீழ்வடிதலைக் தடுக்கும். உடலில் வெப்பமுண்டாக்குவதால் மார்பு சளி, கோழை சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்கும். ப்ளேவனாய்டுகள், டேனின் மற்றும் ரெசின்கள் இருப்பதால் மாத்திரை, டிங்க்சர், வடிநீர் முதலியன தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் பெருமளவு வளரும் ‘யூகலிப்டஸ்’ என்னும் மரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மருத்துவ குணமுள்ள எண்ணெய்… தலைவலி, ஜலதோஷம் போன்ற உபாதைகளுக்கு நல்ல மருந்து…
நீலகிரியில் வளரும் மரத்தின் இலைகளைக்கொண்டு, நீலகிரியிலேயே தயாரிக்கப்பட்டதால் ‘நீலகிரித் தைலம்’ என்னும் பெயர். பெற்றது…மற்ற எண்ணெய்களைப்போல பிசுக்கு இருக்காது… இது கொப்புளங்கள், சிறு காயங்கள், வெட்டுக்கள், மற்றும் சிராய்ப்புகளையும் குணமாக்க பயன்படுத்தப்படுகிறது.
ஆஸ்துமா, மார்பு சளி அல்லது நெரிசல் போன்ற சுவாச பிரச்சினை இருந்தால், யூகலிப்டஸ் எண்ணெயை பயன்படுத்தலாம்.