மழை கால நோய்களும் தப்பிக்கும் வழிமுறைகளும்

மழை கால நோய்களும் தப்பிக்கும் வழிமுறைகளும்

மழை கால நோய்களும் தப்பிக்கும் வழிமுறைகளும்
 
குழந்தைகளை எப்போதுமே கவனமாய் கவனிக்க வேண்டியது அவசியமாகின்றது. அதுவும் மழைக் காலம் என்றால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் டெங்கு ஜுரத்திற்கு அதிக அக்கறை கொடுக்க வேண்டி உள்ளது. பகலில் கடிக்கும் கொசுக்களினால் ஏற்படும் இந்த டெங்கு காய்ச்சல் முதல் அறிகுறிகளாக வைரஸ் காய்ச்சல் போல ஏற்படும். அதாவது ஜுரம், நீர் வடியும் மூக்கு, இருமல் சருமத்தில் தடிப்பு போன்ற பாதிப்பு என ஆரம்பிக்கும்.
 
* மூட்டு வலி, தசை வலி
* கண்களுக்கு உள்ளே வலி
* சோர்வு
* சருமத்தில் சிகப்பு புள்ளிகள்
* மூக்கில் ரத்தம் வடிதல்
* வயிற்று வலி
* வாந்தி
* கறுப்பு நிற வெளிப்போக்கு போன்றவை இருக்கும்.
 
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதே போன்று தான் வைரஸ் ஜுரம் தாக்குதலும் இருக்கும். வைரஸ் ஜுரம் ஆன்டிபயாடிக் மாத்திரைகளால் குணப்படுத்த முடியாது. எனினும் சில மருந்துகளைக் கொடுத்தே கட்டுப்படுத்த முடியும் என்பதால் மருத்துவ ஆலோசனை மிக அவசியம். மழை காலத்தில் ஒருவித ஈரம் எல்லா இடத்திலும் இருக்கும். இது சரும பாதிப்புகளை எளிதில் உருவாக்கும். இது மற்றவர்க்கும் எளிதில் பரவும்.
 
ரிங்வார்ம் கிருமி:  :
 
இது பங்கஸ் கிருமி பாதிப்பு வட்ட வடிவில் சருமத்தில் காட்சி அளிக்கும். சருமத்தில் வளரும், அரிப்பு அதிகமாக இருக்கும், சிறு சிறு வட்டங்களாக ஆரம்பிக்கும். இது பின்னர் பெரிய பெரிய வட்டங்களாக பெரிதாகிப் பரவும். மற்றவர்களுக்கும் பரவும். குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவர். வீட்டு செல்லப் பிராணிகளிடமிருந்து எளிதில் பரவும்.
 
அதிகம் வியர்வை உடையவர்களும் இதனால் தாக்கப்படுவர். துணிகளை சுத்தமான சோப் கொண்டும், கிருமி நாசினி திரவங்கள் கொண்டும் சுத்தம் செய்வது இந்த தாக்குதலில் இருந்து ஒருவரை காக்கும். உடல் ஈரமின்றியும், சுத்தமாகவும் எப்பொழுதும் இருக்க வேண்டும். சருமத்தை எரிச்சலாக்காத பருத்தி ஆடைகளே சிறந்தது. பாதிப்பு ஏற்படின் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
 
நகங்களில் கிருமி :
 
நகங்களின் ஓரங்களில் கிருமிகளின் தாக்குதல் ஏற்படலாம். நகங்கள் நிறம் மாறி சுற்றியுள்ள தசைகளில் வீக்கம் ஏற்படலாம். அடிக்கடி தண்ணீரில் விளையாடுவது, வியர்வை இவை இந்த பாதிப்பினை உருவாக்கும்.
 
மருத்துவ சிகிச்சை அவசியம் :
 
வேப்பிலை பொடி தேய்த்து குளிப்பது சிபாரிசு செய்யப்படுகின்றது. மூட்டு வலி உடையவர்கள் இக்காலங்களில் மலச் சிக்கல் இல்லாமல் இருக்க கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது மழை காலங்களில் வலி கூடுவதனை தவிர்க்கும். மழை வெளியே செல்லாமல் உங்களை உள்ளே இருக்கச் செய்யும்.
 
அடிக்கடி ஏதாவது சாப்பிடச் சொல்லும். ஆனால் பசியில்லாமல் எதுவும் சாப்பிடாதீர்கள். உடனே அஜீரணத்தில் கொண்டு விட்டு விடும். பொதுவில் மழை காலம் என்றாலே நோய் எதிர்ப்பு சக்தியினை குறைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
 
மழைக்கால பாதிப்பு :
 
* டெங்கு
 
* உணவுப் பாதை நோய்கள்
 
* மலேரியா
 
* சரும பாதிப்பு
 
* டைபாய்டு
 
* வைரஸ் ஜீரம் ஆகியவை ஆகும்.
 
இவைகளை தவிர்க்க:
 
* பழங்களே என்றும் எந்த காலத்திலும் சிறந்த உணவு.
 
* உப்பு உணவுகள் உடலில் நீரைத் தங்கச் செய்யும், நோயை கூட்டும், எனவே அதனைத் தவிருங்கள்.
 
* அதிக அரிசி, தர்பூஸ் இவைகளை தவிர்த்து மூக்கடலை, பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
 
* ப்ரவுன் ரைஸ் எனும் பழுப்பு அரிசி, ஓட்ஸ், பார்லி இவை சிறந்தது.
 
* பூண்டினை உணவில் சேருங்கள். பாலுக்குப் பதிலாக தயிர் மற்றும் பாதாம் எடுத்துக் கொள்ளலாம்.
 
* அதிக கனமுள்ள எண்ணெய்களான கடலை எண்ணெய், நல்ல எண்ணெய் இவற்றினை குறைத்துக் கொள்ளுங்கள். * சரும அலர்ஜி உடையவர்கள் மசாலா உணவுகளைத் தவிருங்கள்.
 
* புளி உபயோகத்தினை குறைக்க வேண்டும்.
 
* அதிக அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
 
* ஹெர்பல் டீ நன்கு எடுத்துக் கொள்ளலாம்.
 
* பச்சை காய்கறிகளை விட வேக வைத்த காய்கள் இக்காலத்தில் சிறந்தது.
 
* மழைக்கால நீர் சுகாதாரமின்றி இருக்க அநேக வாய்ப்புகள் உண்டு.
 
* மழையினால் ஏற்படும் வயிற்றுப் போக்கு அதிக ஆபத்தில் கொண்டு விடலாம்.
 
* நன்கு காய்ச்சிய வடிகட்டிய நீரை பயன்படுத்துங்கள்.
 
* வயிற்றுப் போக்கினை அலட்சியமாக கவனிக்காது விட்டு விடாதீர்கள். தும்மும் பொழுதும், இருமும் பொழுதும் கைதுண்டு கொண்டு வாய், மூக்கினை மூடிக் கொள்வது மற்றவர்களுக்கு கிருமி பரவாதிருக்க உதவும். இந்த நல்ல பழக்கத்தினை இன்றிலிருந்தே செயல்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும் இந்த பழக்கத்தினை ஏற்படுத்துங்கள். லெப்டோஸ்பைரோஸிஸ் எனப்படும் கிருமி பாதிப்பும் சுகாதார மற்ற நீரினாலேயே ஏற்படுகின்றது.
 
மூளைக் காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு என அனைத்து பாதிப்பினையும் ஏற்படுத்தும் உடனடி அவசர சிகிச்சை என்பது
 
* இருமல்
* நெஞ்சு வலி
* எச்சிலில் ரத்தம் ஆகும்.
 
இந்த அறிகுறிகள் இருப்பின் உடனடி மருத்துவரை அணுகவும்.
 
* அடிக்கடி முகத்தினை தொட்டுக் கொண்டே இருந்தால் வைரஸ் கிருமிகள் வாய், கண், மூக்கு போன்ற அனைத்து வழிகளிலும் உடலினுள் சென்று விடும். எனவே அடிக்கடி முகத்தினை தொடுவதினை தவிர்க்கவும்.
 
* கைகளை சோப் கொண்டு கழுவுவதே முதல் உடல் நல பாதுகாப்பு முறையாகக் கூறப்படுகின்றது. எனவே உணவு உண்ணும் முன்பாக ஒவ்வொரு முறையும் சோப் கொண்டு கை கழுவவும் அதே போன்று சமைக்கும் முன்பும் சோப் கொண்டு கை கழுவவும்.
 
மழைக்கால கவனம்:  :
 
* தெரு ஓரங்களில் இருக்கும் கடைகளில் சாப்பிடுவது குடும்பம் வெளியூரில் இருக்கும் ஆண்களுக்கு அவசியம். உள்ளூரில் இருக்கும் பலருக்கு விருப்பம். ஆனால் தண்ணீரும், காய்கறிகளும் சுத்தமாக இருப்பது மழைக் காலத்தில் கடினம். ஜுரம், வயிற்றுப் போக்கு, வாந்தி என கிருமிகளின் பாதிப்பால் அநேகர் பாதிக்கப்படுகின்றனர். கவனம் தேவை.
 
* கண்டிப்பாக கொசு மருந்துகளை உபயோகித்தே ஆக வேண்டும். மலேரியா தவிர்ப்பு முறைக்காக மருத்துவ ஆலோசனை பெறவும். நில வேம்பு நீர் குடிக்கவும்.
 
* தண்ணீரில் நனைந்து நடப்பது ஜாலிதான். கணக்கற்ற சரும வியாதிகள் காலில் வந்து விடும். எனவே நோயை நடந்து வரவேற்காதீர்கள்.
 
* குடை, மழைகோட்டு இவை வாசல் அறையிலேயே இருக்கட்டும்.
 
* குளிர்ந்த உணவுகள், பானகங்களை எடுத்துக் கொள்ளாதீர்கள்.
 
* குழந்தைகளை மழையிலோ, மழை நீரிலோ விளையாட விடாதீர்கள்.
 
* மழை நீரில் நடக்கும் பொழுது மின்சார கம்பிகள் அதனுள் இருக்கலாம் பிள்ளைகளை எச்சரியுங்கள்.
 
* கால்களை எப்பொழுதும் ஈரமில்லாமல் உலர்வாய் துடைத்து வைத்திருங்கள்.
 
* சளி, ஜுரம் வராது தவிர்க்கவும். வந்தால் உடனடி மருந்து எடுக்கவும். இல்லையெனில் பலநாள் படுக்க வைத்து விடும்.
 
* ஏசி அறையினுள் நனைந்த முடி, நனைந்த உடல், ஈர உடை இவற்றுடன் செல்லாதீர்கள்.
 
* ஆஸ்த்துமா, சர்க்கரை நோய் உடையவரா… வீட்டில் ஈர சுவர்கள் இருந்தால் எளிதில் பூஞ்சை நோய்கள் தாக்கி விடும். அதிக கவனம் தேவை.
 
* அதிக கொழுப்பு உணவு, பாஸ்ட் புட் இவைகளைத் தவிருங்கள். வயிற்றில் எளிதில் கிருமி பாதிப்பு ஏற்படும். இக்காலங்களில் அதாவது மழை நேரங்களில் அதிக ஜீரண கோளாறு ஏற்படும். கிருமிகள் அதிக வீரியம் கொண்டதாக இருக்கும்.
 
* மழைக் காலங்களில் பழங்களைத் தவிர்ப்போர். அநேகர் கிடைக்கும் பழங்களை கண்டிப்பாய் உண்ண வேண்டும். இதனால் வைட்டமின் சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.
 
* உலர் பழங்கள், கொட்டைகள் மிகவும் நல்லது.
 
* சூப் உட் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். அதில் பூண்டு, கிராம்பு இவைகளை சேர்ப்பது உடலுக்கு நன்மை பயக்கும்.
 
* மழைக்காலம் என்றால் தண்ணீர் குடிப்பது குறைந்து விடும். சுத்தமான எட்டு க்ளாஸ் நீர் உடலுக்கு மிக அவசியம்.
 
* மழைக் காலம் என்றால் காரசார உணவுகளும், மசாலா உணவுகளும், உப்பு கூடிய உணவுகளும் அனைவரையும் ஈர்க்கும். ரத்த கொதிப்பு உடையவர்கள் இவ்வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை அதிக உலர், ரத்த அழுத்தத்தில் கொண்டு விடும்.
 
* வேப்பிலை, பாகற்காய் போன்ற கசப்பு உணவுகள் அலர்ஜி, சரும கிருமி பாதிப்பிலிருந்து உதவுவதாக கூறப்படுகின்றது. வேப்பிலை பொடியினை சருமத்தில் சிறிது தடவி குளிக்கலாம்.
 
* தண்ணீரை வீட்டிலோ வீட்டை சுற்றியோ தேங்க விடாதீர்கள்.
 
* அறைகள் அடைத்து மூடி வைக்காதீர்கள். அறைக்கு வெளிச்சமும் காற்றோட்டமும் அவசியமே.
 
* வெதுவெதுப்பான நீரில் குழந்தைகளை குளிக்க வையுங்கள்.
 
* கொசு வலை எல்லா ஜன்னல்களுக்கும் அவசியமே.
 
* கொசு வலை படுக்கைகள் மீதும் அவசியம்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்