தற்கொலையில் ஆண்கள் தான் அதிகம்

தற்கொலையில் ஆண்கள் தான் அதிகம்

தற்கொலையில் ஆண்கள் தான் அதிகம்

புதுடில்லி : திருமணமான பெண்களை விட திருமணமான ஆண்கள் தான் அதிகமாக தற்கொலை செய்கிறார்கள் என அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் மனைவிகளை விட தற்கொலை செய்து கொள்ளும் கணவன்மார்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகமாம். விவகாரத்து அல்லது மனைவியின் மரணத்தால் மனமுடைந்து போகும் கணவன்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்கிறார்களாம்.

தேசிய குற்றவியல் கழகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளி விபர கணக்கின்படி, 2014ம் ஆண்டில் மட்டும் 60,000 திருமணமான ஆண்களும், 27,000 திருமணமான பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதே போன்று, மனைவியை இழந்த 1400 பேரும், கணவனை இழந்த 1300 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவாகரத்து செய்து கொண்டவர்களில் 550 ஆண்களும், 410 பெண்களும் தற்கொலை செய்துள்ளனர்.

 

இந்த புள்ளி விபரத்தின் அடிப்படையில், நாட்டில் தற்கொலை செய்து கொள்பவர்களில் 66 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் திருமணமானவர்கள் என தெரிய வந்துள்ளது. திருமணமாகாதவர்கள் 21 சதவீதம் பேர் மட்டுமே தற்கொலை செய்து கொள்கிறார்கள். இவர்களில் கணவனை இழந்த அல்லது மனைவி இழந்த மற்றும் விவகாரத்து ஆனவர்கள் தற்கொலை செய்து கொள்வது 3 சதவீதத்தினர் மட்டுமே.

 

வாழ்க்கை துணையை இழந்து வாழ்வதிலும் சரி, விவகாரத்து செய்து கொண்டு வாழ்வதிலும் சரி ஆண்களை விட பெண்கள் தான் 3.5 மடங்கு அதிகம். இவற்றில் பெரும்பாலான தற்கொலைகளுக்கு குடும்ப பிரச்னைகள் தான் காரணமாக கூறப்படுகிறது.

 

வயது அடிப்படையில் பார்த்தால், 18 முதல் 30 வயது வரையிலான 60 சதவீதம் ஆண்களும், 30 முதல் 45 வயது வரையிலான 72 சதவீதம் ஆண்களும், 45 முதல் 60 வயது வரையிலான 80 சதவீதம் ஆண்களும் 2014ல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

 

உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்விலும் பெண்களை விட திருமணமான ஆண்கள் தான் அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். ஆண்கள் உணர்வுரீதியாக முடிவுகள் எடுப்பதாலும், அது அவர்களை மதுவிற்கு அடிமையாக செய்வதாலும் மனஅழுத்த அதிகரித்து, அது அவர்களை தற்கொலை தூண்டுவதாக மனநல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பெண்களில் குறைவு என்பதால், உலக அளவில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் விகிதம் ஆண்களை விட குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்