ரத்தக்குழாய் அடைப்புக்கு புதிய சிகிச்சை!

ரத்தக்குழாய் அடைப்புக்கு புதிய சிகிச்சை!

ரத்தக்குழாய் அடைப்புக்கு புதிய சிகிச்சை!

 

தண்ணீர் ஓடும் பாதையை ஆறு என்றும் ஓடை என்றும் பிரிக்கிற மாதிரி, உடலில் உள்ள ரத்தக்குழாய்களை நுண்ணிய ரத்தக்குழாய்கள் (Micro vascular), பெரிய ரத்தக்குழாய்கள் (Macro vascular) என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், மூளை, வயிறு, கழுத்து, கால், தொடை என்று பலவற்றிலும் பெரிய ரத்தக்குழாய்கள் இருக்கின்றன. உடல் உறுப்பு களுக்குத் தேவையான ரத்தத்தைக் கொடுப்பது இவற்றின் வேலை.

தண்ணீர்க் குழாயில் பாசி படிவதைப் போல, ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும்போது ரத்தக் குழாயின் உட்பக்கமாக கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டிக்கொள்கிறது. இதனால் ரத்தக் குழாயின் உள்விட்டம் சுருங்கி அடைத்துவிடுகிறது. இதை ‘ரத்தக்குழாய் அடைப்பு’ Atherosclerosis) என்கிறோம். இதனால் ரத்தக்குழாயில் ரத்தம் பாய்வது குறைந்துபோவதால், உறுப்புகளுக்குத் தேவையான ரத்தமும் ஆக்சிஜனும் கிடைப்பதில்லை. இதன் விளைவாக, மாரடைப்பும் பக்க வாதமும் ஏற்படுகின்றன.

நீங்கள் ஒரு டஜன் ஆப்பிள் பழம் வாங்கிக்கொண்டு மாரடைப்பு வந்த நண்பரைப் பார்க்கப் போனால், ‘‘ரெண்டு ரத்தக்குழாய்கள்ல அடைப்பாம். அதான் பைபாஸ் பண்ணிக் கிட்டேன்’’என்று சர்வ சாதாரணமாகச் சொல்லுவார்.

ஆனால் இந்த அடைப்பு எப்படி ஏற்படுகிறது என்பது தெரிந்தால், அசந்து விடுவீர்கள். ஆரோக்கியமாக இருப் பவர்களுக்கு ரத்தக் குழாய்கள் கண்ணாடி மாதிரி வழுவழுப்பாக இருக்கும். இதனால், கொழுப்பு அதில் ஒட்டுவதற்குத் தாமதம் ஆகும்.

ஆனால், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு ரத்தக்குழாய்கள் சுண்ணாம்புத் தரை மாதிரி சொரசொரப் பாகிவிடும். வழுவழுப்பான தரையைவிட சொரசொரப்பான தரையில் அழுக்கு சுலபமாக ஒட்டிக் கொள்ளும், இல்லையா? அது மாதிரிதான், இதில் கொழுப்பு சுலபமாக ஒட்டிக் கொள்ளும். இது அடுத்தகட்ட பாதிப்புகளுக்கு அடி போடும்.

வீடு கட்டும்போது பூமி பூஜை போடுவதில் தொடங்கி பில்லர் போட்டு, கான்க்ரீட் கூரை போட்டு, சுவரைப் பூசி, சுண்ணாம்பு அடிப்பது வரை பல கட்டங்களைத் தாண்டி வருகிற மாதிரி, ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெறுகின்ற நிகழ்வாகும். நம் ரத்தக்குழாயில் மூன்று சுவர்கள் இருக்கின்றன.

கீழிருந்து மேலாக உட்சுவர், நடுச்சுவர், வெளிச்சுவர் என்று சொல்லுவோம். தமனியின் உட்சுவரில் ரத்த வெள்ளை அணுக்கள், ரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொழுப்பைச் சாப்பிட்டு ‘நுரை அணுக்களாக’ (Foam cells) மாறிவிடும். பிறகு இவை உட்சுவரில் கொஞ்சம் கொஞ்சமாகப் படியத் துவங்கும்.

புதிய நுரை அணுக்கள் படியப் படிய, பழைய நுரை அணுக்கள் அழிந்து போகும். அப்போது அவற்றிலிருந்து கொழுப்பு மட்டும் தனியாகப் பிரியும். இந்த நிலைமையில் ரத்தக் குழாயின் தசை அணுக்கள் குஷியாகி கொழுப்புப் பொருளை நோக்கி நகர்ந்து செல்லும். இப்படிக் கொழுப்பும் தசை அணுக்களும் உட்சுவரில் கைகோர்த்துக் கொள்வதால், தமனியின் நடுச்சுவர் பாதிப்படையும். ஒரு சிறிய கட்சியிலிருந்து ஒரு பெரிய கட்சிக்குத் தொண்டர்கள் தாவி விடும்போது சிறிய கட்சி பலவீன மாகி விடுகிறது அல்லவா? அது மாதிரிதான் இதுவும்.

இப்படி பலவீனமான இடத்தில் மிக சுலபத்தில் அழற்சி உண்டாகி ரத்தக்குழாய் சுருங்கத் தொடங்கும். இதனால் ரத்தம் ஒரே சீராகப் பாயாமல் நின்று நின்று பாயும். அப்போது அங்கு ரத்தம் உறைந்து கட்டியாக மாறி உட்சுவரில் ஒட்டிக் கொள்ளும். இதை ‘ரத்த உறைவுக்கட்டி’ (Thrombus) என்கிறோம். துப்பாக்கியில் இருக்கிற குண்டு எவ்வளவு ஆபத்தானதோ, அந்த அளவுக்கு ஆபத்துள்ளது இந்தத் திராம்பஸ்!

எப்படி?

உட்சுவரில் ஒட்டிக்கொண்ட திராம்பஸ் வெளிச்சுவருக்கு வந்து, தமனியை முழுவதுமாக அடைத்துக் கொள்ளும். இந்த மாதிரி இதயத்தமனி அடைத்துக் கொள்ளும்போது இதயத் தசைகளுக்கு ரத்தம் கிடைக்காது. இதயம் செயல்பட சிரமப்படும். உடனே நெஞ்சு வலிக்கும். சட்டையெல்லாம் நனைகிற அளவுக்கு உடல் வியர்த்துக் கொட்டும். இதுதான் மாரடைப்பு. சமயங்களில் இந்தத் திராம்பஸ் உடலில் ‘சுற்றுலா’ செல்லக் கிளம்பிவிடும்.

அதாவது தான் உருவான இடத்திலிருந்து நகர்ந்து, ரத்தத்தில் பயணம் செய்ய ஆரம்பிக்கும். இப்படி நகர்ந்து செல்லும் ரத்தக்கட்டிக்கு ‘எம்போலஸ்’ (Embolus) என்று பெயர். இந்த எம்போலஸ் ஒவ்வொரு உறுப்பாகப் போய்க்கொண்டிருக்கும்போது, குறுகிய ரத்தக்குழாய் ஏதாவது சிக்கிவிட்டால் போதும்… உடனே அதை அடைத்துவிடும். இப்படி ரத்தக்குழாய் அடைப்பு இதயத் தமனியில் ஏற்படுமானால் மாரடைப்பு என்றும், மூளைத் தமனியில் ஏற்படுமானால் பக்கவாதம் என்றும் கூறுகிறோம்.

ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பைத் தவிர்க்க இன்றுவரை ‘ஸ்டாட்டின்’ வகை மாத்திரைகளைக் கொடுப்பது நடைமுறையில் உள்ளது. ஸ்டாட்டின் மாத்திரைகளைச் சாப்பிடும்போது சிலருக்கு உடல்வலி, தசைவலி, வாந்தி போன்ற தொல்லைகள் தொடரும். இந்தத் தொந்தரவுகள் இல்லாத புதிய மருந்தைக் கண்டுபிடிப்பதில் அண்மையில் ஐதராபாத்தில் உள்ள CDFD ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சிக்குழுவின் தலைவர் டாக்டர் ராஸ்னா பண்டாரி. ‘‘உடல் செல்களுக்குச் சக்தி கொடுப்பது கிஜிறி எனும் மூலக்கூறு. இதைவிட சக்தி குறைந்த IP7 எனும் மூலக்கூறும் செல்களில் உள்ளது. இது ஐனோசிட்டால் என்ற சர்க்கரைப் பொருளும் ஏழு வகையான பாஸ்பேட் மூலக்கூறுகளும் அடங்கிய ஒரு வேதிப்பொருள். இது மனித செல்களில் புரத உற்பத்தி செய்வதற்கும் ரத்தம் உறைதலைத் தூண்டுவதற்கும் உதவுகிறது.

ரத்தம் உறைதலுக்கு அடிப்படை செல்களாக விளங்கும் தட்டணுக்களில் பாலிபாஸ்பேட் எனும் வேதிப்பொருள் வெளியாகிறது. இதுதான் ரத்தத்தை உறைய வைத்து ரத்தக்குழாயை அடைத்து ரத்த ஓட்டத்தை நிறுத்தி மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கு வழி செய்கிறது. செல்களில் மிறி7 மூலக்கூறு குறைவாக இருக்கும் போது பாலிபாஸ்பேட் வெளி யாவதில்லை, ரத்தம் உறைவதில்லை என்பதை எங்கள் ஆராய்ச்சியில் தெரிந்து கொண்டோம். இதைத் தொடர்ந்து மிறி7 மூலக்கூற்றைக் குறைக்கின்ற வேதிப்பொருளைக் கண்டுபிடிப்பதில் இறங்கி யிருக்கிறோம். அந்த மூலக்கூறு ஸ்டாட்டின் மருந்துக்கு மாற்றாக அமையும்’’ என்றார் பண்டாரி.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்