ஆளி விதையின் அற்புதமான மருத்துவ குணங்கள்!
ஆளி விதையின் அற்புதமான மருத்துவ குணங்கள்!
ஆளி விதையில் ஊட்டச்சத்துடன், மருத்துவ குணங்களும் அதிக அளவில் காணப்படுகின்றன.
இவை உடலுக்கு சீரான வெப்பம் அளிக்கின்றன. இந்த விதையை பொடி செய்து, போதுமான அளவு நீருடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆளி விதை எடுத்துக் கொள்ளும் அளவு, நீங்கள் உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தது. வறுக்கும் போது இந்த விதைகள் மொறுமொறுப்பான மற்றும் சுவையாக இருக்கின்றன.
இது உங்கள் பகுதிகளில் உள்ள உள்ளூர் சூப்பர் மார்க்கெட் அல்லது சாலையோர பலசரக்கு கடைகளில் கிடைக்கும்.
கொழுப்பை குறைக்கும்
அதிக நார்ச்சத்து கொண்ட ஆளி விதை கொழுப்பைக் குறைக்க பயன்படுகின்றது. உங்கள் இரத்த சர்க்கரை அளவை நிலையாக்கும். குடல்கள் நன்கு செயல்பட உதவும்.
அதிக அளவில் ஒமேகா-3
இரண்டு தேக்கரண்டி ஆளி விதை தரும் சிறந்த பரிசு குறுகிய சங்கிலி ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள். பொதுவாக இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மீன் எண்ணெய்யில் உள்ளன.
இதய நோய், மூட்டுவலியை குணப்படுத்தும்
ஆளி விதை ஆல்பா லினோயிக் அமிலங்களைக் கொண்டுள்ளது. இந்த அமிலம் நாள்பட்ட இதய நோய், மூட்டுவலி, ஆஸ்துமா, நீரிழிவு நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும். மேலும் இது பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராக உங்கள் உடலை பாதுகாக்க உதவுகிறது.
மாதவிடாய் பிரச்சனையை தீர்க்கும்
ஆன்டி- ஆக்ஸிடன்ட் மற்றும் பைட்டோ-கெமிக்கல் போன்றவை ஆளி விதையில் வளமாக உள்ளது. இதனால் இவை கருத்தரிப்பு பிரச்சனைகளை நீக்குவது, மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பது மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளை குறைக்க பயன்படுகிறது.