படுக்கும் முன் போட வேண்டிய ஃபேஷ் பேக்குகள்!
மருத்துவ குறிப்பு,
1149
படுக்கும் முன் போட வேண்டிய ஃபேஷ் பேக்குகள்!
அக்காலத்தில் இளமைத் தோற்றமானது 30 வயது வரை நன்கு தென்பட்டது. ஆனால் இக்காலத்திலோ மாசடைந்த சுற்றுச்சூழலால் 25 வயதிலேயே சரும சுருக்கங்களுடன், முதுமைத் தோற்றத்தைப் பெற்றுவிடுகின்றனர். அதுமட்டுமின்றி, அதிகப்படியான வேலைப்பளுவால், சருமத்தைப் பாதுகாக்கக்கூட போதிய நேரம் இல்லாமல் போய்விட்டது.
அப்படியே நேரம் இருந்தாலும், கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை அன்றாடம் பயன்படுத்தி, ஒருநாள் பயன்படுத்த தவறினாலும், அசிங்கமான தோற்றத்தைப் பெறக்கூடும். ஆகவே எப்போதும் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, இயற்கையான பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரிக்க முயற்சி செய்யுங்கள்.
அதுவும் இரவு நேரத்தில் படுக்கும் முன், ஒருசில ஃபேஷ் பேக்குகளைப் போட்டு வந்தால், நிச்சயம் இளமையைப் பாதுகாப்பதோடு, அழகான மற்றும் பொலிவான முகத்தோடு திகழலாம்.
கிளிசரின், எலுமிச்சை மற்றும் ரோஸ்வாட்டர்
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கிளிசரின், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்ழுன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.
ஓட்ஸ் மற்றும் வெள்ளரிக்காய்
முதலில் ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை ஈரப்படுத்தி, பின் ஓட்ஸ் பொடியைக் கொண்டு மென்மையாக முகத்தை 10 நிமிடம் மசாஜ் செய்து, முகத்தைக் கழுவி, அடுத்து வெள்ளரிக்காய் துண்டுகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். பின்பு சிறிது மாய்ஸ்சுரைசரை முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும்.
மில்க் க்ரீம் மற்றும் ரோஸ் வாட்டர்
மில்க் க்ரீம் மிகவும் சிறப்பான மாய்ஸ்சுரைசர் மற்றும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கக்கூடிய பொருளும் கூட. எனவே 1 டீஸ்பூன் மில்க் க்ரீம் மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.
வைட்டமின் ஈ மாத்திரைகள் மற்றும் ரோஸ் வாட்டர்
மிகவும் சிம்பிளான முறையில் முகத்தின் பொலிவையும், இளமையையும் அதிகரிக்க நினைத்தால், வைட்டமின் ஈ மாத்திரைகள் மற்றும் ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தைப் பராமரியுங்கள். அதற்கு 2 வைட்டமின் ஈ மாத்திரைகளை எடுத்துக் கொண்டு, அதில் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.
முட்டையின் வெள்ளை மற்றம் தயிர்
ஒரு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
கற்றாழை ஜெல் மற்றும் ஆலிவ் ஆயில்
1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
தயிர் மற்றும் கடலை மாவு
1 டேபிள் ஸ்பூன் தயிரில், 1 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.