ரகசியத்தை யாருக்கும் சொல்லாதே…!! நம் வாழ்க்கைக்கு தேவைப்படும் முத்தான தகவல் !!
சாணக்கியர் மனிதர்களுக்கு சொன்ன பல விஷயங்களில் கூறப்படுவது…
உன்னுடைய மிக முக்கியமான ரகசியங்களை நீ யாருடனும் பகிர்ந்து கொள்ளாதே. உன்னுடைய ரகசியத்தை உன்னால் பாதுகாக்க முடியாத போது, வேறு யாரால் பாதுகாக்க முடியும் என்பதை நினைத்துக் கொள் என்பதாகும்.
எனவே, நமக்கு முக்கியமான ரகசியங்களை நாமே பாதுகாக்காமல் நமது நண்பரிடம் கூறும் போது, அவரும், அதனை அவரது நண்பரிடம் கூற மாட்டார் என்பதில் என்ன உறுதி இருக்கிறது.
எது யாருக்கும் தெரியக் கூடாது என்று நினைக்கிறோமோ அது யாருக்குமே தெரியப்படுத்தக் கூடாது என்பதை நினைவில் கொள்வோம்.
சாணக்கியர் கூறிய மேலும் சில பொன்மொழிகள்..
மனிதனுக்குத் துணிச்சலைப் போல உலகில் உண்மையான நண்பன் வேறு யாருமில்லை.
கோபம் அன்பை அழிக்கிறது. செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.
மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.
மிகவும் நேர்மையாக இருக்காதே. நேராக வளர்ந்த நெடிய மரங்கள்தான் முதலில் வெட்டுக்கு இறையாகும். நேர்மையாளர்களும் அப்படித்தான் வெட்டப்படுவார்கள்.
இடம் பொருள் பார்த்து நடந்து கொள்ளல் வேண்டும்