நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்

நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்

சுருளி மனோகர் | கோப்புப் படம்
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் சென்னையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 51.

புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் சுருளி மனோகர் வலம் வந்தவர்.

கடந்த ஆண்டு 'இயக்குநர்' என்ற திரைப்படத்தை இயக்கத் தொடங்கிய மனோகர், அதில் தன்னைப் போன்ற சிறிய நகைச்சுவை நடிகர்கள் பலரையும் நடிக்க வைத்தார். ஆனால், அவரது நோய் தீவிரமடைந்ததால் அந்தப் படத்தின் வேலைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

சுருளி மனோகர் மனைவி மற்றும் 3 மகள்களுடன் வாழ்ந்து வந்தார்.
 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்