வெள்ளத்தால் காஷ்மீரில் செல்போன் சேவை துண்டிப்பு: சாட்டிலைட் மூலம் சரி செய்கிறது பி.எஸ்.என்.எல்

வெள்ளத்தால் காஷ்மீரில் செல்போன் சேவை துண்டிப்பு: சாட்டிலைட் மூலம் சரி செய்கிறது பி.எஸ்.என்.எல்

வெள்ளத்தால் காஷ்மீரில் செல்போன் சேவை துண்டிப்பு: சாட்டிலைட் மூலம் சரி செய்கிறது பி.எஸ்.என்.எல்

காஷ்மீரில் வரலாறு காணாத வெள்ளப் பேரழிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்குள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் முற்றிலுமாக லேண்ட்லைன், செல்போன், இண்டர்நெட் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளுடனான தகவல் தொடர்புகளை காஷ்மீர் முற்றிலுமாக இழந்துவிட்டது.

இந்நிலையில், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையுடன் இணைந்து அங்கு செல்போன் சேவையை சரிசெய்யும் ‘வார் பூட்டிங் ஆபரேஷன்’-ல் களமிறங்கியுள்ளது. இதற்காக ஐதராபாத் மற்றும் பெங்களூரு பகுதிகளிலிருந்து கைதேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களை அனுப்பியுள்ளது.

இதுபற்றி ஜம்மு-காஷ்மீரின் தொலைத்தொடர்பு மேலாளர் ஆர்.என்.சுதாகர் கூறுகையில், ”செயற்கைக்கோள்களின் உதவியுடன் தகவல் தொடர்புகளை சரிசெய்ய முயற்சித்து வருகிறோம். டிஜிட்டல் சாட்டிலைட் போன் டெர்மினல்
சேவைகளை ‘ஆக்டிவேட்’ செய்வதன் மூலம் இதனை ஓரளவு சீர் செய்யலாம். உத்தராகண்ட் வெள்ளத்தின் போதும் இதைத்தான் செயல்படுத்தினோம். அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தகவல் தொடர்பு வசதிகளை
வழங்குவதற்காக நாங்கள் செயற்கைக்கோள்களை கொண்டிருந்தோம். அதே முறையை இப்போது காஷ்மீரிலும் செய்கிறோம்.

எங்களது குழுவினர் அனைவரும் ஜம்மு பகுதியில் சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ராணுவம் மற்றும் விமானப்படை உதவியுடன், சில தனியார் ஆபரேட்டர்களும் எங்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். எல்லோருடைய கூட்டு முயற்சியினால் விரைவில் தகவல் தொடர்பை சீரமைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.
 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்