5 கி.மீ தூரம் நடந்தே அலுவலகம் செல்லும் கலெக்டர்

5 கி.மீ தூரம் நடந்தே அலுவலகம் செல்லும் கலெக்டர்

5 கி.மீ தூரம் நடந்தே அலுவலகம் செல்லும் கலெக்டர்

கேரளா மாநிலத்தை சேர்ந்த கலெக்டர் ஒருவர், வீட்டிலிருந்து தன் அலுவலகத்திற்கு நடந்தே செல்கிறார்.கேரளாவின் கோட்டாயம் மாவட்ட கலெக்டராக இருப்பவர் அஜித்குமார்.

இவர் குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு முறை தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு சுமார் 5 கி.மீ தூரம் நடந்தே செல்கிறார்.

இதனால் உடலுக்கு பயிற்சி கிடைப்பதோடு, உள்ளூர் மக்களின் பிரச்னைகளை நேரடியாக அறிய முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதையே பின்பற்றுமாறு பிற அதிகாரிகளையும் அவர் கேட்டுக் கொள்வதோடு அவர்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்கிறார்.

இதையே மாணவர்களும் பின்பற்றி பள்ளிக்குச் செல்வது நல்லது என கூறும் இவர், ரத்த தானத்தை வலியுறுத்தி கடந்த சில மாதங்களில் இரு முறை ரத்த தானம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்