சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்

சென்னை ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் நேற்று ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர். இது கலாசார சீரழிவு அல்ல என்றும் கூறினர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு காபி ஷாப்பில் இளம்ஜோடிகள் முத்தமிட்டுக் கொண்டு இருந்ததை கண்ட பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் அந்த கடையை அடித்து நொறுக்கினார்கள். முத்தமிட்ட இளைஞர்களையும் அடித்து விரட்டினார்கள்.

எங்களது சுதந்திரத்தில் தலையிட இந்த கலாசார காவலர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில் குரல் எழுப்பினார்கள். இந்த செயலை கண்டித்து கேரளாவில் முத்தம் கொடுக்கும் போராட்டமும் (கிஸ் ஆப் லவ்) நடத்தப்பட்டது.

பின்னர் இந்த போராட்டம் கொல்கத்தா உள்பட பல வட மாநிலங்களுக்கும் பரவியது. இதுவரை தமிழ்நாட்டுக்கு குறிப்பாக சென்னைக்கு இந்த முத்த போராட்டம் வராமல் இருந்தது. நேற்று சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவ-மாணவிகள் இதனை தொடங்கிவிட்டனர்.

மாணவ-மாணவிகள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து, முத்தத்தை பரிமாறிக் கொள்வதில் தவறு இல்லை என்பதை குறிக்கும் வகையில் சென்னை ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் கூடி ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டுக் கொண்டனர்.

மாணவரும் மாணவியும் சேர்ந்து ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர். இப்படி ஏராளமான மாணவ-மாணவிகள் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்து அன்பை பரிமாறிக்கொண்டனர்.

இதுகுறித்து சில மாணவிகள் கூறுகையில், ‘‘மாணவ-மாணவிகள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதால் எந்த கலாசாரமும் கெட்டுப்போகாது. இது அன்பின் வெளிப்பாடு தான். இதில் தவறு எதுவும் இல்லை. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது சரி அல்ல’’ என்றனர்.
 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்