அடுத்த வருஷம் இந்த நாளெல்லாம் லீவு, லீவு, லீவு!
அடுத்த வருஷம் இந்த நாளெல்லாம் லீவு, லீவு, லீவு!
2015ஆம் ஆண்டு தை திருநாள் ஜனவரி 15ம் தேதி வருகிறது. வழக்கமாக ஜனவரி 14ஆம் தேதிதான் தை திருநாள் வருவது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி 15 வியாழக்கிழமையன்று தை திருநாள் கொண்டாடப்படுகிறது. எனவே அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. 2015ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்டுள்ளார். அவரது அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜனவரி 1- ஆங்கிலப்புத்தாண்டு (வியாழக்கிழமை) ஜனவரி 4- மிலாதுநபி (ஞாயிற்றுக்கிழமை) ஜனவரி 15- பொங்கல் (வியாழக்கிழமை) ஜனவரி 16- திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை) ஜனவரி 17- உழவர் திருநாள் (சனிக்கிழமை) ஜனவரி 26- குடியரசு தினம் (திங்கட்கிழமை) மார்ச் 21- தெலுங்கு ஆண்டு பிறப்பு (சனிக்கிழமை) ஏப்ரல் 1- வங்கிகள் கணக்கு முடிப்பு (வணிக-கூட்டுறவு வங்கிகள்) (புதன்கிழமை ஏப்ரல் 2- மகாவீரர் ஜெயந்தி (வியாழக்கிழமை) ஏப்ரல் 3- புனித வெள்ளி (வெள்ளிக்கிழமை) ஏப்ரல் 14- தமிழ்ப்புத்தாண்டு-அம்பேத்கர் பிறந்தநாள் (செவ்வாய்க்கிழமை) மே 1- மே தினம் (வெள்ளிக்கிழமை) ஜூலை 18- ரம்ஜான் (சனிக்கிழமை) ஆகஸ்டு 15- சுதந்திர தினம் (சனிக்கிழமை) செப்டம்பர் 5- கிருஷ்ண ஜெயந்தி (சனிக்கிழமை) செப்டம்பர் 17- விநாயகர் சதுர்த்தி (வியாழக்கிழமை) செப்டம்பர் 24- பக்ரீத் பண்டிகை (வியாழக்கிழமை) அக்டோபர் 2- காந்தி ஜெயந்தி (வெள்ளிக்கிழமை) அக்டோபர் 21- ஆயுத பூஜை (புதன்கிழமை) அக்டோபர் 22- விஜயதசமி (வியாழக்கிழமை) அக்டோபர் 23- முகரம் (வெள்ளிக்கிழமை) நவம்பர் 10- தீபாவளி (செவ்வாய்க்கிழமை) டிசம்பர் 23- மிலாதுநபி (புதன்கிழமை) டிசம்பர் 25- கிறிஸ்துமஸ் (வெள்ளிக்கிழமை) இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு ரொம்ப நல்ல ஆண்டு என்று கூறப்படுகிறது. வாரவிடுமுறையை ஒட்டி பண்டிகை தினங்கள் வருவதால் தொடர் விடுமுறை நிறைய கிடைக்கிறது. ஏப்ரல் 2 மகாவீர் ஜெயந்தி வியாழக்கிழமையும், ஏப்ரல் 3 புனிதவெள்ளி வெள்ளிக்கிழமையும் வருவதால் தொடர்ந்து சனி ஞாயிறு விடுமுறை வருகிறது. அதேபோல மே1ம் தேதியும், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி வெள்ளிக்கிழமை வருகிறது. தொடர்ந்து அக்டோபர் 21ல் தொடங்கி அக்டோபர் 23 வரை ஆயுதபூஜை, விஜயதசமி முகரம் பண்டிகை விடுமுறைகள் வார நாட்களான புதன், வியாழன், வெள்ளி வருகிறது, சனி, ஞாயிறு என அந்த வாரம் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அதேபோல டிசம்பர் 25 கிருஸ்துமஸ் தினம் வெள்ளிக்கிழமை வருவதால் அந்த வாரமும் மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும்