இங்கிலாந்தை மணக்க வைக்கும் வீரப்பனின் ஆன்மா !

இங்கிலாந்தை மணக்க வைக்கும் வீரப்பனின் ஆன்மா !

தமிழக மற்றும் கர்நாடக போலீசாருக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய சந்தனக் கடத்தல் வீரப்பனின் புகழ் இன்று உலகளவில் பரவிவருகிறது.வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை கேள்விப்பட்ட  லஷ் நிறுவனர் தனது நிறுவன தயாரிப்பு பொருள்களுக்கு வீரப்பனின் புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தியுள்ளார்.

இங்கலாந்திலுள்ள லஷ் என்ற அழகு சாதன நிறுவனத்தின் வாசனை திரவியங்கள், இயற்க்கை வழியில் மலர்களைக் கொண்டு தயாரிக்கப்படுபவை.

"ஸ்மக்ளர்ஸ் சோல்" (கடத்தல்காரர்களின் ஆன்மா) என்ற வாசனை திரவியம் இந்திய சந்தன எண்ணை மற்றும் வெட்டிவேர்களினால் தயாரிக்கப்படுகிறது. இந்த வாசனை திரவியத்தின் புட்டியில் சந்தனக்கடத்தல் வீரப்பனின் படத்தை அச்சிடுகிறார்கள். முன்பதிவின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் அளவிற்கு அந்த வாசனை திரவியம் விற்பனை சக்கைப் போடு போடுகிறதாம்.

அடர்த்தியான மீசை வளர்பதற்கான  ஒரு கிரீமையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள். ரோஜா மெழுகு மற்றும் சந்தன எண்ணையால் தயாரிக்கப்படும் அந்த குழைவின்(கிரீம்) பெயரே வீரப்பன் தான்.

சந்தன எண்ணை வாங்க இந்தியா வந்திருந்தபோது வீரப்பன் குறித்து அறிந்துகொண்டதாகவும், பெரிய நாயகன் போல் வாழ்ந்த அவரின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாகவே இந்த பொருட்களுக்கு அவர் பெயரை வைத்ததாகவும்  குறிபிடுகிறார்  லஷ் நிறுவனர் மார்க் கான்ஸடன்டைன்.

அந்த சிங்கத்தின் சரித்திரம் கடல் கடந்து ஓடுகிறது....

 

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்