வாட்ஸ்அப்பில் இனி அனைவரும் பேசலாம்
தமிழ் உலகம்,
1715
வாட்ஸ்அப்பில் அனைவரும் இலவசமாக பேசும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் பேசும் வசதியை அறிமுகப்படுத்த முடிவு செய்து, கடந்த 1 ஆண்டு காலமாக, இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனாளர்களுக்கு மட்டுமே வாட்ஸ்அப் நிறுவனம் பேசும் வசதியை கொடுத்து பரிசோதனையில் ஈடுப்பட்டு வந்தது.
இதைத் தொடர்ந்து, இந்த வசதியைப்பெற பலரும் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்போர் அனைவரும் பயன்படுத்தும் விதத்தில், அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மென்பொருளை வாட்ஸ்அப் தளத்தில் இருந்த பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், ஏற்கனவே வாட்ஸ்அப்பில் பேசும் வசதியை பயன்படுத்தி வரும் ஒருவர், உங்களுக்கு கால் செய்வதன் மூலம் இந்த புதிய வசதியை நீங்களும் பயன்படுத்தத் தொடங்கலாம். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பின் புதிய பதிவினை பதிவிறக்கம் செய்த பின்னர், வாய்ஸ் காலினை தரவிறக்கம் செய்த மற்றொரு நபர் மூலமாக உங்களுக்கு அழைப்பு விடுக்க சொன்னால் பேசும் வசதியைப் பெற்று விடலாம். இதில் பேச முற்படும் இரு தரப்பினரிடமும் இந்த மென்பொருள் இருக்கவேண்டும். அப்போதுதான் பேசமுடியும்.
ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் 1,900 கோடி டாலருக்கு வாட்ஸ் அப் நிறுவனத்தை வாங்கியது. இதைத் தொடர்ந்து இத்தகைய அறிவிப்பை வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.
இந்தியாவில் 70 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் வாட்ஸ்அப்பின் தகவல்களை அனுப்பும் வசதியை பயன்படுத்துகின்றனர். இது மொத்த வாட்ஸ்அப் பயனாளிகளில் 10 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கும் பேசும் வசதி வாட்ஸ்அப்பில் வேண்டுமா?.... எங்களது தொடர்பு எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் இருந்து தகவல் அனுப்பவும். உங்களுக்கு அழைப்பு விடுத்து பேசும் வசதியை முடுக்கி விடுகிறோம்....
புதிய பாதிப்பை தரவிறக்கம் செய்ய : http://www.whatsapp.com/android/
வணக்கம் கரூர் தொடர்பு என் : 9944129408