ஓட்டுப்பதிவு அமைதியாக நடக்கிறது: தேர்தல் அதிகாரி பேட்டி
தமிழ் உலகம்,
1007
ஓட்டுப்பதிவு அமைதியாக நடக்கிறது: தேர்தல் அதிகாரி பேட்டி
சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் ஓட்டுப்பதிவை வெப் காமிரா மூலம் நேரடியாக தலைமைச் செயலகத்தில் இருந்து கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, ஊழியர்களுடன் அமர்ந்து வாக்கு பதிவு நிலவரங்களை கண்காணித்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு காலை 8 மணியில் இருந்து நல்ல முறையில் அமைதியாக நடந்து வருகிறது. பல வாக்குச்சாவடிகளில் நீண்ட கியூ வரிசையில் நின்று வாக்களித்தனர். 2 பூத்களில் ஓட்டு மிஷின் சரிவர வேலை செய்யவில்லை என்ற தகவல் கிடைத்ததும் உடனே அதை மாற்றி புதிய மிஷினை வைத்து ஓட்டு பதிவு நடத்தப்பட்டது. போதுமான போலீஸ் பாதுகாப்பு உள்ளதால் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் வாக்குப்பதிவு நடந்தது.
வாக்குப்பதிவு நடப்பதை கண்காணிக்க தலைமை செயலகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் இங்கிருந்தே கண்காணிக்க முடிகிறது.