குற்றாலத்தில் தாமதமான சீசன்
தமிழ் உலகம்,
953
குற்றாலத்தில் தாமதமான சீசன்
திருநெல்வேலி: குற்றாலத்தில் 'சீசன்' மீண்டும் களைகட்டி உள்ளது. சுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகரித்துள்ளது.நெல்லை
மாவட்டம் குற்றாலத்தில் வழக்கமாக ஜூனில் 'சீசன்' துவங்கி,. மூன்று மாதங்கள் நீடிக்கும். இந்த ஆண்டு பருவகால
மாற்றத்தால் மேயில் மழை கொட்டியது. ஜூனில் தென்மேற்கு பருவ மழை பெய்யவில்லை. இதனால் 'சீசனும்' மந்தமாகவே
இருந்தது. குற்றாலம், தென்காசியில் சுற்றுலா பயணிகளால் வியாபாரமும் எதிர்பார்த்த அளவு இல்லை.இந்நிலையில் கடந்த
சில தினங்களாக 'சீசன்' மீண்டும் களைக்கட்ட துவங்கி உள்ளது. நேற்றும், லேசான சாரல் பெய்தது. அனைத்து அருவிகளிலும்
குளிக்கும் அளவுக்கு தண்ணீர் கொட்டுகிறது. அரசு சார்பில் 'சாரல் விழா' வரும் வாரத்தில் துவங்கும்.