சுதந்திரதின உரைக்கு மக்கள் கருத்து எதிர்நோக்கி நிற்கிறேன் மோடி

சுதந்திரதின உரைக்கு மக்கள் கருத்து எதிர்நோக்கி நிற்கிறேன் மோடி

சுதந்திரதின உரைக்கு மக்கள் கருத்து ; எதிர்நோக்கி நிற்கிறேன் : மோடி

புதுடில்லி : தனது 10வது மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பேசுகையில்; கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களை நினைவுகூர்ந்தார். மேலும் வரும் ஆக. 15 ம் தேதி சுதந்திர தின உரையில் மக்களின் கருத்துக்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அவரவர் எண்ணத்தை எனக்கு அனுப்பி வையுங்கள் என மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி ரேடியோ மூலம் மக்களிடையே உரையாற்றி வருகிறார். இன்றைய உரையில் மோடி பேசியதாவது: 


இந்த ஆண்டு நல்ல பருவமழை துவங்கி உள்ளது. இது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். இந்த கார்கில் விஜய் திவாசில், வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீர்களை நினைவுகூர்கிறேன். இவர்களை வணங்குகிறேன். ஜூலை 26 கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கொள்ள வேண்டிய தினம். 



சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிப்பது அவசியம். அரசுக்கும் அப்பாற்பட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதன் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு சாலை விபத்து ஏற்படுகிறது என்ற புள்ளிவிபரம் கவலை தருகிறது. சாலை விபத்தில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒருவர் உயிரிழக்கிறார். சமீபத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் 4 வயது சிறுமி பலியான சம்பவம் கவலை அளிக்கிறது. வேகமான சிகிச்சை கிடைக்காமல் அவர் இறந்தார் . சாலை பாதுகாப்பு கொள்கையில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. சாலை விபத்துக்களை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கென புதிய சட்டதிட்ட கொள்கை வகுக்கப்படவுள்ளது. 

 

அறிவியல் தொழில்நுட்பம் :

அறிவியல் தொழில்நுட்பம் நாட்டின் வளர்ச்சியின் உயிர்நாடி ஆகும் . இளைஞர்கள் இந்த துறையில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும். ம.பி., மற்றும் ஜார்கண்ட்டில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தூய்மை இந்தியா பணியில் ஈடுபட்டுள்ளதாக கேட்டறிந்தேன். அவர்களை நினைக்கையில் பெருமையாக உள்ளது. ஒருவர் செய்யும் மகத்தான வேலை பலரின் வாழ்வை காக்கும். அனைத்து கிராமங்களிலும் தடையில்லா மின்சாரம் கிடைக்க உழைகிறோம். வடகிழக்கு மாநிலங்களுக்காக தனி அமைச்சகம் உள்ளது. இருந்தும் டில்லியில் இருந்து கொண்டு வடகிழக்கு மாநில பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை. இதனால் அந்த அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் மாதத்திற்கு 7 நாட்கள் வடகிழக்கு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பார்கள். தேசிய சாலை பாதுகாப்பு கொள்கை மற்றும் கட்டணமில்லா சிகிச்சை ஆகியவற்றை கொண்டு வர தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் . 


ஆகஸ்ட் 15 நமது சுதந்திர தினம் கொண்டாடவிருக்கிறோம். அந்நாளில் எனது உரைக்கு பல்வேறு யோசனைகள் , கருத்துக்கள் எனக்கு வந்த வண்ணம் உள்ளது . இன்னும் மக்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன். இடம்பெற வேண்டிய எனது உரைக்கு உங்களின் கருத்துக்களை அனுப்பி வையுங்கள். இவ்வாறு மோடி பேசினார் .

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்