ஏழ்மை + எளிமை + திறமை + அர்ப்பணிப்பு = கலாம்

ஏழ்மை + எளிமை + திறமை + அர்ப்பணிப்பு = கலாம்

ஏவுகணை விஞ்ஞானி, முன்னாள் ஜனாதிபதி, இளைஞர்களின் வழிகாட்டி, எளிமையின் நாயகனாக திகழந்தஅப்துல்கலாம் நேற்று மாரடைப்பால்காலமானார். 

இவர் 1931 அக்., 15ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார். ராமநாதபுரத்தில் உள்ள சுவார்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில் தமிழைப் பாடமொழியாகக் கொண்டு பயின்றார். ஆங்கிலம்ஒரு மொழிப் பாடமாகக் கற்பிக்கப்பட்டது. திருச்சி செயிண்ட் ஜோசப்பில் கல்லுாரிப் படிப்பை முடித்த அவர் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப்டெக்னாலஜியில் விமானயியலில் பட்டம் பெற்றார். வெளிநாட்டு நிறுவனங்களில் பயிற்சி பெற வாய்ப்பின்றி முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே

உருவானவர்.


 

பன்முக விஞ்ஞானி:




 

1958ல் டி.ஆர்.டி.ஒ.வில் பணியாற்றத் தொடங்கிய கலாம், 1962ல் இஸ்ரோவில் (இந்திய செயற் கைக்கோள் ஆராய்ச்சி அமைப்பு) திட்ட இயக்குநராகச் சேர்ந்தார். ரோகிணி செயற்கைக் கோளை விண்வெளியில் கொண்டு செலுத்திய எஸ்.எல்.வி.3ஏவுகணையை உருவாக்கினார்.ஏவுகணை வடிவமைப்பு, மேம்பாடு, மற்றும் கட்டுமானம் ஆகியவற்றைக் கவனித்தார். பின் 1982ல் டி.ஆர்.டி.ஒ.வில் மீண்டும் சேர்ந்து ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வுக்கூடத்தின் (டி.ஆர்.டி.எல்) இயக்குநரானார்.ஏவுகணைகளை உள் நாட்டி லேயே தயாரிக்க ஒருங்கிணைந்த செலுத்துஏவுகணைகளை உள்நாட்டிலேயேஉருவாக்கும் திட்டம் வகுத்தார்.ஒரு நாளைக்கு 18 மணிநேரம் உழைக்கக்கூடிய கலாம் அறிவியல் தொழில்நுட்பத்தையே காதலித்தார். தமிழ் இலக்கியத்திலும் வீணை மீட்டுவதிலும் ஈடுபாடுடைய இவர்,திருமணமே செய்து கொள்ளவில்லை. சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்.


 

பாதுகாப்பு சக்தி:




 

இவருடைய நண்பர்கள் இவருடைய எளிமையையும் உயர் அளவிலான
சிந்தனையையும் போற்றினர். கடைசி வரை எளிமையாகவே வாழ்ந்தார்.
அவருடைய சகாக்கள் எப்போதும் அவரை அணுகும் விதமாக 
அவருடைய இல்லம் இருந்தது.இவரது திறமையிலும் ஆர்வத்திலும் நம்பிக்கையுடைய அனைவரும்டி.ஆர்.டி.ஒ.வில் இவர் திறம்படவே செயல்படுவார் என்று எதிர்பார்த்தனர்.அதே போல் ஒருங்கிணைந்த செலுத்து ஏவுகணை மேம்பாட்டுத் திட்டம் துவங்கி 7 ஆண்டுகளில் தரையிலிருந்து விண்ணைத் தாக்கும் திரிசூல், தரையிலிருந்து தரை இலக்கை பிருத்வி, நடுத்தர வேக ஆகாஷ் ஏவுகணை, பீரங்கியை எதிர்த்துத் தாக்கும் நாக் ஆகிய பாதுகாப்பு சக்திகள் மேம்படுத் தப்பட்டன. அதன்பின் 1989ல் வெற்றிகரமாக சோதித்தறியப் பட்ட அக்னி, வெளியுலகுக்கு
இந்தியாவில் பெருமையைஉணர்த்தியது. அக்னி எஸ்.எல்.வி.3ராக் கெட்டின் மறுவடிவமேயாகும்.இந்தியா சொந்த முயற்சியிலேயே முன்னேற வேண்டும் என்று கருதிய அவர் இந்திய விஞ்ஞானிகள் எந்தவொரு நாட்டு விஞ்ஞானிகளுக்கும் சளைத்தவரல்லர் என்று கூறினார். 60க்கும் மேற்பட்ட கல்வி, ஆராய்ச்சி அமைப்புகளை ஒருங்கிணைத்து வெற்றி கண்டதன் அடிப்படையில் இதனை கலாம் தெரிவித்திருந்தார். ஐ.ஜி.எம்.டி.பி. மூலம் அப் துல் கலாம் பல்வேறு தொழில்நுட்ப மையங்களை ஏற்படுத்தினார். உந்து விசை, செலுத்து அமைப்பு, உயரிய உலோகக் கலவைகள் ஆகியவற்றை டி.ஆர்.டி. ஒ.வின் தொழில் நுட்ப இயக்குநரகம் கவனித்தது.
3 ஆயிரம் டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலையிலும் உருகாத உலோகப் பொருட்களை காம்ப் ரோக் என்னும் மையம் உருவாக்கியது. இதுஏவுகணைகள் தீப்பிடித்து எரிந்து விடாமல் இருக்க பயன்பட்டது.அக்னியின் திண்ம உந்து விசை எரிபொருள் இஸ்ரோ எஸ்.எல். வி.3 பயன்படுத்தியதாகும். திரவ எரிபொருள் குறித்த ஆய்வு அக்னியின் 2வது கட்டத்துக்குப் பயன் பட்டது. பிருத்வி திரவ இயக்கு எரி பொருளால் உந்தப்படுகிறது. எனவே இந்திய தொழில்நுட்பத் தைக் கொண்டே கலாம் பாது காப்பு சக்திகளுக்கு வலுவூட்டினார்.டி.ஆர்.டி.ஒ.வில் தலைமை இயக்குநராக இவர் பதவி வகித்த போதே இந்தியா மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியது. 2வது முறையாக ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் அணுகுண்டுச் சோத னையை நிகழ்த்தியது. இந்திய அணுசக்தி துறை (டி.ஏ.இ.) டி.ஆர்.டி.ஒ. மற்றும் இஸ்ரோஆகிய அமைப்புகள் இணைந்து
இச்சோதனையை நிகழ்த்தின.டி.ஆர்.டி.ஒ.வின் சார்பில் முழுவீச்சில் சோதனையில் கலாம் ஈடுபட்டார்.டி.ஆர்.டி.ஒ.வின் ஒரு ஆய்வுக் கூடம் நிரூபிக்கப்பட்ட வடிவமைப்பை ஆயுதமாக்கும் பணியைப் செயல்படுத்தியது. வெடிப்பைத் தோற்றுவிக்கும் கருவிகள், அதிக மின்சாரத்தைத் துாண்டும் கருவிகள் ஆகியவற்றை ராணுவத் தின் தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைத்து, சோதனை செய்து உற்பத்தி செய்வது இந்த ஆய்வுக் கூடத்தின் பணியாக இருந்தது. வளி இயக்கம் இயற்பியல், படைக்கலன், பிளப்பு, பாதுகாப்பு, பறப்பு சோதனைகள்ஆகியவற்றில் மேலும் மூன்றுஆய்வுக் கூடங்கள் பணியாற்றின.


 

அணு ஆயுத சோதனை:




 

1998ல் பொக்ரானில் நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக இந்தியா நடத்தியது. இதில் அப்துல்கலாமின் பங்கு மிக முக்கியமானது. இதன் மூலம் இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தார். எதிர்நோக்கி யிருந்த அணு ஆயுத அபாயத்தை அகற்றும் வகையில் அணு ஆயுதச் சோதனையில் அணுசக்தி துறையிலிருந்து ஆர்.சிதம்பரம் முக்கியப்பங்காற்றினார். அவருக்கு இணையாக டி.ஆர்.டி.ஒ.வில் அப்துல்கலாம்பணியாற்றினார்.


 

விருதுகள்:




 

தேசிய வடிவமைப்பு விருதுகள், டாக்டர் பிரேன் ராய் விண்வெளி விருது; ம.பி. அரசின் தேசிய நேரு விருது, 1994ல் இந்திய வானியல் சங்கம் வழங்கிய ஆர்யப்பட்டா விருது. 1996ல் பேராசிரியர் ஒய்.நாயுடம்மா நினைவு தங்கப்பதக்கம், ஜி.எம்.மோடி அறிவியல் விருது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உன்னதத்துக்கான
எச்.கே.பிரோடியா விருது உட்படபற்பல விருதுகளை அப்துல்கலாம் பெற்றுள்ளார். 1981ல் பத்மபூஷன் விருதும், 1996ல் பத்ம விபூஷன் விருதும் பெற்ற அப்துல்கலாம் 1997 டிசம்பரில் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றார்.இந்திய வானியல் சங்கத்தின் துணைத் தலைவராகவும், இந்திய தேசிய பொறியியல் அகாடமி பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் அகாடமி, மின்னணு மற்றும் தொலைத் தகவல் தொடர் புக் கழகத்தின் ஆய்வாளராகவும் அப்துல் கலாம் திகழ்ந்தார்.


 

எழுதிய நுால்கள்:




 

இந்தியா 2020, பொற்காலத்தை நோக்கி ஒரு பார்வை என்ற புத்தகத்தை இஸ்ரோவின் செயல் இயக்குனர் வி.எஸ்.ராஜனுடன் இணைந்து
எழுதினார். இவரது சுயசரிதையை'அக்னி சிறகுகள்' என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இரண்டுமேஆங்கிலத்தில் வெளி வந்தவை.2002 ஜூலை 25ம் தேதி இந்தியாவின் 11வது ஜனாதிபதியாகபதவியேற்றார். 2007 ஜூலை 25 வரை அப்பதவியில் இருந்தார். அவரது பதவிக்காலத்தில் 'மக்களின் ஜனாதிபதி' என அழைக்கப்பட்டார். மாணவர்களுக்கு அடிக்கடி 'கனவு காணுங்கள்' என அறிவுறுத்துவார். ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்பும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவர் மறையும் வரை இந்த தேசத்துக்காக உழைத்துக் கொண்டே இருந்தார்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்