ஆக., 1 முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு... -எஸ்.எம்.எஸ்., ! பொருட்கள் இருப்பு, விலை விவரம் தெரியும்

ஆக., 1 முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு... -எஸ்.எம்.எஸ்., ! பொருட்கள் இருப்பு, விலை விவரம் தெரியும்

பெங்களூரு: ''ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் பொருட்கள், விலை விவரம், வரும் ஆக., 1ம் தேதி முதல், கார்டுதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படும்,” என, உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:இதற்காக, 80 லட்சம் கார்டுதாரர்களின் மொபைல் போன் எண்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. ஏ.பி.எல்., - பி.பி.எல்., கார்டு தாரர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படும்.ஒரு லட்சம் கார்டுதாரர்களிடமிருந்து வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்கள், ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டு, ரேஷன் கார்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை இணைப்பதன் மூலம், போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடிக்க முடியும்.போலி ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள், வரும், 30ம் தேதிக்குள் ஒப்படைக்கும்படி, ஏற்கனவே பொது வினியோக துறை அவகாசம் அளித்துள்ளது. அதன் பின் கண்டுபிடிக்கப்படும் போலி ரேஷன் கார்டு தாரர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.பொது வினியோக துறை வழங்கும் உணவு பொருட்களை, தாலுகா சென்டர்களுக்கு சென்று கடைக்காரர்கள் வாங்கும் முறை மாற்றப்படுகிறது. இனி, கடையிலேயே உணவு பொருட்கள் வினியோகிக்கப்படும்.பல்லாரி, ஹூப்பள்ளி, பெங்களூரு - ஒயிட்பீல்டு, கே.ஆர்.,புரம் பிரிவு பகுதிகளில் எலக்ட்ரானிக் பில் சிஸ்டம் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்