பீகாரில் வேளாண் கல்லூரிக்கு அப்துல்கலாம் பெயர் முதல்–மந்திரி நிதிஷ்குமார் சூட்டினார்

பீகாரில் வேளாண் கல்லூரிக்கு அப்துல்கலாம் பெயர் முதல்–மந்திரி நிதிஷ்குமார் சூட்டினார்

பீகாரில் வேளாண் கல்லூரிக்கு அப்துல்கலாம் பெயர் முதல்–மந்திரி நிதிஷ்குமார் சூட்டினார் 

பாட்னா, 

 
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பெயரை என்றென்றும் நினைவு கூரும் விதமாக பல்வேறு மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. பீகார் மாநில முதல்–மந்திரி நிதிஷ்குமார், கிஷன்கஞ்ச் நகரில் உள்ள அரசு வேளாண் கல்லூரிக்கு அப்துல்கலாமின் பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார்.
 
இதேபோல் மத்திய பிரதேச மாநில முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான், சிறந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு முன்மாதிரியாக பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்படும் என்று அறிவித்தார்.
 
சமாஜ்வாடியின் மராட்டிய மாநில பிரிவு மும்பை நரிமன்முனையில் இருந்து கண்டிவிலி வரையிலான 35 கி.மீ. தூர கடற்கரைக்கு அப்துல்கலாம் பெயரை சூட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
 
கேரள மாநில மகளிர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் சனீஷ் கூறுகையில், "தான் இறந்தால் அன்று விடுமுறை விடக்கூடாது. அதற்கு பதில் கூடுதலாக ஒரு நாள் பணியாற்றவேண்டும் என்ற அப்துல் கலாம் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாக வருகிற 2–ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) எங்களுடைய ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள்" என்று தெரிவித்தார்.
 

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்