பாகிஸ்தான் மழை வெள்ளத்தில் 81 பேர் பலி
தமிழ் உலகம்,
1000
பாகிஸ்தான் மழை வெள்ளத்தில் 81 பேர் பலி
பாகிஸ்தானில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கடும் மழையாலும் அது ஏற்படுத்திய பரவலான வெள்ளத்தாலும் பச்சிளங்குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 300,000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டுப் பேரிடர் நிர்வாகத் துறை தெரிவித்தது. இதுவரை 1,900 வீடுகள் சேதமடைந்துள்ளன. 81 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரில்மட்டும் 38 பேர் இறந்தனர்.
இதுவரை 172,016 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பஞ்சாப்பின் தெற்குப் பகுதியில் 375 கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. மழை மேலும் மோசமடையும் என்று பாகிஸ்தான் வானிலைத் துறை நேற்று முன்தினம் தெரிவித்தது. படம்: ஊடகம்