ஆவணங்கள் இன்றி இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் கைது;நடிகர் ஷாருகானை பார்க்க விரும்புவதாக கூறினார்
ஆவணங்கள் இன்றி இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் கைது;நடிகர் ஷாருகானை பார்க்க விரும்புவதாக கூறினார்
ஜலந்தர்
பாகிஸ்தான் கராச்சி நகரை சேர்ந்தவர் சண்ட் கான் (வயது 27) இவர் தகுந்த ஆவணங்கள் இன்றி சம்ஜ்ஹுதா எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் வந்து உள்ளார்.அவரை ஜலந்தரில் உள்ள அட்டாரி எல்லை சோதனை சாவடியில் போலீசார் அவரை கைது செய்தனர். இவர் டெல்லியில் உள்ள தர்ஹாக்களில் பிரார்த்தனை நடத்துவதற்காக வந்ததாக கூறி உள்ளார்.மேலும் பாலிவுட் நடிகர் ஷாருகானை சந்திக்க மும்பை செல்ல விரும்புவதாகவும் கூறி உள்ளார்.
நேற்று சண்ட் கானை போலீசார் டிக்கெட், பாஸ்போர்ட் மற்றும் விசா எதுவும் இன்றி லாகூரில்மிருந்து டெல்லிக்கு பயணம் செய்து உள்ளார்.
ஜலந்தர் நகர ரெயில்வே போலீஸ் நிலைஅய திகாரி பால்தேவ் சிங் ராண்ட்வா கூறும் போது:-
ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஒரு பெண் தகுந்த ஆவங்கள் இருந்து வருவதாகவும் ரெயிலை நிறுத்த அனுமதி வழங்குமாறும் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவரைடம் சிறிய பேக் ஒன்று இருந்தது. அதில் மருந்துகள் இருந்தது. அதை பார்க்கும் போது அவர் மன நிலைபாதிப்படைந்து உள்ளதாக தெரிகிறது. அவரது பாஸ்போர்ட்டை அவரது தாய்வழி மாமா வைத்துள்ளதாக கூறி உள்ளார். என்று கூறினார்