டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய சசிபெருமாள் உயிரிழந்தார் கன்னியாகுமரி,
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய சசிபெருமாள் உயிரிழந்தார்
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள உண்ணாமலைக்கடையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் போராட்டம் நடத்தினார். டாஸ்மாக் கடையை அடைக்க கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினார். செல்போன் டவரில் ஏறி சுமார் 5 மணிநேரம் போராட்டம் நடத்தி உள்ளார். அப்போது அவர் மயங்கி விழுந்தார் என்று கூறப்படுகிறது. அவரை மீட்டு தீயணைப்பு துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.
அவருடைய உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், சசிபெருமாள் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்து உள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூரண மது விலக்கு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் சசிபெருமாள் ஆவார், அவர் டெல்லியிலும் போராட்டம் நடத்தி உள்ளார். 2013-ம் ஆண்டு தொடர்ந்து 30 நாட்களுக்கு மேல் உண்ணவிரத போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.