113 வயது மூதாட்டி காலமானார் பாரம்பரிய உணவு உண்டு வாழ்ந்தவர்

113 வயது மூதாட்டி காலமானார் பாரம்பரிய உணவு உண்டு வாழ்ந்தவர்

ஊட்டி:ஊட்டியில், ருஜம்மாள் எனும், 113 வயது பழங்குடியின மூதாட்டி காலமானார். 

நீலகிரி மாவட்டம், ஊட்டி, கிளன்மார்கன் புதுமந்து பகுதியில் வசித்து வந்த, இவரது வாழ்க்கை முறை குறித்து, குடும்ப உறுப்பினர்கள் கூறியதாவது:ருஜம்மாளுக்கு, 12 மகன்கள், நான்கு மகள்கள் என, 16 பிள்ளைகள். ஐந்து தலைமுறை கண்ட அவருக்கு, 49 பேரன், பேத்திகள், 125 கொள்ளு பேரன், பேத்திகளும் உண்டு.

வாரிசுகளில் சிலர் இறந்து விட்டனர். பால், வெண்ணெய், நெய், தேன், கேரட், உருளைக்கிழங்கு, ராகி, கோதுமை, சாமை போன்ற உணவை அதிகம் சேர்த்துக் கொள்வார். இந்த உணவு முறையே அவருக்கு நீண்ட ஆயுளை வழங்கியுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நீலகிரி மாவட்ட தோடர் சமுதாய பொதுச்செயலர் சத்யராஜ் கூறுகையில், ''எங்கள் பாரம்பரியத் தைச் சேர்ந்த ஒருவர், 100 ஆண்டுகளைத் தாண்டி வாழ்ந்திருப்பது, எங்களுக்கு பெருமை தருகிறது. பாரம்பரிய உணவு தான், அவரது நீண்ட ஆயுளின் ரகசியம்,'' என்றார்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்