பெங்களூர் பள்ளியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான மூன்று வயது குழந்தை.!
பெங்களூர் பள்ளியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான மூன்று வயது குழந்தை.!
கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூன்று வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள இந்திரா நகர் பகுதியில் உள்ள அந்த தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் குரல் எழுப்பியுள்ளனர். நேற்று நடைபெற்ற இந்த சம்பவத்தையடுத்து, வலியினால் துடித்து அழுத அந்த குழந்தை, அருகாமையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதை நிரூபிக்கும் மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.