சவூதி அரேபியாவில் பேரீச்சம் திருவிழா.!

சவூதி அரேபியாவில் பேரீச்சம் திருவிழா.!

சவூதி அரேபியாவில் பேரீச்சம் திருவிழா.!

 

சவூதி அரேபியாவில் காசிம் மாகணத்தின் புரைதா நகரத்தில் புரைதா பேரீச்சம் பழ திருவிழா தொடங்கியது. இது உலகின் மிகப்பெரிய பேரீச்சம் பழ திருவிழாவாக கருதப்படுகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேரீச்சம்பழ விவசாயிகள், விற்பனையாளர்கள் பல்வேறு ரகங்கள் அடங்கிய பல ஆயிரம் டன் பேரீச்சம் பழங்களை பார்வைக்கு வைப்பார்கள். இதற்காக பேரிச்சம் பழங்கள் அடுக்கப்பட்ட வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும்.

1000த்திற்கு மேற்பட்ட வாகனங்களில் பேரீச்சம் பழங்களோடு 2500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இங்கு வருகை தருவார்கள். இதற்கா 3 லட்சம் சதுர அடி அளவுள்ள மார்க்கெட் பகுதியில் புரைதா நகர முனிசிபாலிட்டி இதற்கான ஏற்பாடுகளை வருடந்தோறும் செய்து வருகிறது. ஒட்டு மொத்த காசிம் மாகணத்தில் மட்டும் சுமார் 70 லட்சம் பேரீச்சம் பழ விவசாய பண்ணைகள் இருப்பதாகவும் இப்பகுதிக்கு பேரீச்சம்பழ வணிகம் முக்கிய பொருளாதரமாக திகழ்வதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்