குற்றால அருவியில் குளித்த போது பாறாங்கல் விழுந்து சுற்றுலா பயணி படுகாயம்

குற்றால அருவியில் குளித்த போது பாறாங்கல் விழுந்து சுற்றுலா பயணி படுகாயம்

குற்றால அருவியில் குளித்த போது பாறாங்கல் விழுந்து சுற்றுலா பயணி படுகாயம்

குற்றாலத்தில் சாரல் மழை பெய்யாததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தது. ஆனால் அருவிகளில் தண்ணீர் அதிகரிக்கவில்லை. இருப்பினும் இதமான சூழல் நிலவியதால் நேரம் செல்ல செல்ல சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. அவர்கள் அனைவரும் மெயினருவியில் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.

மதுரையை சேர்ந்த சுற்றுலா பயணி பாலகிருஷ்ணன் (வயது 45) என்பவரும் அருவியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அருவி தண்ணீரில் பெரிய பாறாங்கல் ஒன்று 3 துண்டாக உடைந்து பாலகிருஷ்ணன் தலையில் விழுந்தது.

இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. உடனே அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்