கலாம் கடைசி நிகழ்ச்சியின் வீடியோ ஏன் இல்லை?
கலாம் கடைசி நிகழ்ச்சியின் வீடியோ ஏன் இல்லை?
அப்துல் கலாமின் ஆலோசகர் ஸ்ரீஜன் பால் சிங் நேற்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அப்துல் கலாமின் கடைசி நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:
‘அவருடைய கடைசி நிகழ்ச்சியில், நானும் கலந்து கொண்டேன். அவர் என்னிடம் கடைசியாக பேசிய வார்த்தை, ‘Funny guy, all well?’ மாணவர்களிடம் மூன்று வாக்கியங்கள் பேசியிருப்பார். பிறகுதான் அவர் மயங்கி விழுந்தார். அடுத்த ஒரு மணி நேரம் அவருக்காக நான் மிகவும் வேண்டிக்கொண்டேன். அதுபோல என் வாழ்க்கையில் வேண்டியதேயில்லை.
இறப்பதற்கு நான்கு வாரங்களுக்கு முன்பு, உங்களுக்குப் பிடித்த வேலையை செய்யும்போது இறந்துபோவதுதான் சிறப்பானது என்றார். அவர் எண்ணியபடியே அவர் உயிர் பிரிந்தது. இந்தப் பாக்கியம் சிலருக்குத்தான் கிடைக்கும். தன்னை ஒரு ஆசிரியராக மற்றவர்கள் நினைவில் கொள்ளவேண்டும் என்று அவர் விரும்பினார்.
ஷில்லாங் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தியதால், அந்த நிகழ்வை யாரும் புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்கவில்லை’ என்றார்.