பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு அறிவுரை: கல்வித்துறை உத்தரவு

பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு அறிவுரை: கல்வித்துறை உத்தரவு

பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு அறிவுரை: கல்வித்துறை உத்தரவு

 

பஸ் படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்களுக்கு பள்ளி பிரார்த்தனை கூட்டத்தின் போது அறிவுரை கூற வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இலவச பஸ் பாஸை பயன்படுத்தி அரசு பஸ்களில் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும் மாணவர்களில் பெரும்பாலானோர் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியவாறு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக ஆங்காங்கு வாகனங்களில் அடிபட்டு மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பஸ்சின் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பள்ளி பிரார்த்தனை கூட்டத்தின்போது அறிவுரை வழங்க வேண்டும். பஸ் நிறுத்தங்களில் மாணவர்கள் முண்டியடித்து கொண்டு நிற்காமல், பஸ் வரும் போது ஒதுங்கி நிற்கும்படியும், ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்