10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களை இயக்க தடை உத்தரவை மாற்றி அமைக்க முடியாது

10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களை இயக்க தடை உத்தரவை மாற்றி அமைக்க முடியாது

10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களை இயக்க தடை உத்தரவை மாற்றி அமைக்க முடியாது

 

டெல்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேலான, டீசல் வாகனங்களை இயக்க பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை, திருத்தி அமைக்க முடியாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது. டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களில் இருந்துவெளியேற்றப்படும் புகை இதற்கு முக்கிய காரணம். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவின் பீஜிங் நகரை விட, டெல்லியில் காற்று மாசு அதிகம்ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லி மற்றும் தலை நகர் மண்டல பகுதிகளில் (என்சிஆர்) 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்படும் டீசல் வாகனங்களை இயக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) தடை விதித்தது. இதனால் இதுபோன்ற டீசல் வாகனங்களுக்கு தகுதி சான்றுகளை (எப்.சி) வழங்க போக்குவரத்து துறை மறுத்து வருகிறது.

இதைத் தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயத் தின் உத்தரவுக்கு தடை விதிக்க வலியுறுத்தி, வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனாலும் அம்மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி சுவதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் ஆஜரான, கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் வாதாடியதாவது:

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து டீசல் வாகன உரிமையாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களுக்கு தகுதி சான்று மறுக்கப்படுவதால் டெல்லி, அரியானா, உ.பி மாநில அரசுகளை கண்டித்து வாகன உரிமையாளர்கள் தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இது போன்று போராட்டம் நடத்தப்பட்டால், அத்தியாவசிய பொருட்கள் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுவிடும். ஆகவே இவ்விவகாரத் தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது உத்தரவை திருத்தி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார். வாதங்களை தொடர்ந்து நீதிபதிகள் அளித்த உத்தர வில், ‘’10 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்படும் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம் உறுதி செய்த உத்தரவை தீர்ப்பாயம் திருத்தி அமைக்க முடியாது. டெல்லி அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடையை மீறி இயக்கப்படும்
வாகனங்களுக்கு அபராதம் விதிப் பது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் ’’ என கூறப்பட்டுள்ளது.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்