பேஸ்புக் செய்த குறையை சுட்டிக்காட்டியா இந்திய மாணவன்..!

பேஸ்புக் செய்த குறையை சுட்டிக்காட்டியா இந்திய மாணவன்..!

நவீன தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்தவர்களாக விளங்கும் பல இளைஞர்களின் கனவான பேஸ்புக் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் வேலை உறுதியாவதற்கு முன்பான நிலை கிடைத்தும் கூட அது கையை விட்டுப் போகும் நிலையை சந்தித்துள்ளார், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு இந்திய வம்சாவளி மாணவர். அவர் செய்த ஒரு நல்லகாரியம்தான் இந்த நிலைக்குக் காரணம்.. அந்த நல்ல காரியம். பேஸ்புக்கில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக் காட்டியதுதான் காரணம்.
மரூடர்ஸ் மேப் என்ற அப்ளிகேஷனை அரன் கண்ணா உருவாக்கினார். இதை பயன்படுத்தி பேஸ்புக் மெசஞ்சரில் இணையும்போது, நமக்கு மெசேஜ் அனுப்புவோர் எங்கிருந்து அனுப்புகிறார்கள் என்பதை கண்டறிய முடியும். இது மிகப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். அதாவது, ஒரு குறுஞ்செய்தியை வைத்தே நீங்கள் எங்கிருக்கீர்கள் என்பதை கண்டுபிடித்துவிட முடியும். உண்மையில் இதைக் கண்டுபிடித்தார் அரன் கன்னா. ஆனால் இது பேஸ்புக் நிறுவனம் அதை விரும்பவில்லை. இந்தக் கண்டுபிடிப்பை அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டார். இதையடுத்து பலரும் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்தனர்.
இதற்கு அடுத்த 3 வது நாளிலேயே அரன் கன்னாவுக்கு வழங்கப்பட்ட இன்டர்ன்ஷிப்பை ரத்து செய்து விட்டது பேஸ்புக் நிறுவனம். மேலும் பேஸ்புக்கில் இருந்த இடத்தை எக்ஸ்டென்ஷனையும் அது நீக்கி விட்டது. தப்பைச் சுட்டிக் காட்டிய அரன் கன்னாவைப் பாராட்டாமல், அவருக்கான இன்டர்ன்ஷிப்பை பேஸ்புக் ரத்து செய்ததை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
 

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்