கழிவறை, படுக்கை அறையில் ரூ.24 கோடி லஞ்ச பணத்தை பதுக்கி வைத்திருந்த அரசு என்ஜினீயர்

கழிவறை, படுக்கை அறையில் ரூ.24 கோடி லஞ்ச பணத்தை பதுக்கி வைத்திருந்த அரசு என்ஜினீயர்

கழிவறை, படுக்கை அறையில் ரூ.24 கோடி லஞ்ச பணத்தை பதுக்கி வைத்திருந்த அரசு என்ஜினீயர்
 
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு ஊழியர் ஒருவர் லஞ்சப்பணம் ரூ.24 கோடியை குளியல் அறை, கழிப்பறை, தண்ணீர் தொட்டி, படுக்கை அறையில் பதுக்கி வைத்துள்ளார். மேலும் அவரிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம், ஹவுரா மாவட்டம், பாலி மாநகராட்சியில் உதவி பொறியாளராக பிரணாப் என்பவர் பணியாற்றி வருகிறார். 45 ஆயிரத்தை மாதச் சம்பளமாக பெற்று வந்த பிரணாப், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்நிலையில் பொறியாளர் பிரணாப் மீது கட்டட ஒப்பந்ததாரர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அண்மையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து பாலியில் உள்ள பிரணாப்பின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் கட்டுகட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
படுக்கை அறையின் தரைத்தளத்தில் பெரிய பள்ளம் தோண்டி கட்டு கட்டாக பணம் புதைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த கழிப்பறையை தோண்டியபோது கத்தை கத்தையாக பணம் சிக்கியது. குளியல் அறையின் மேல் பகுதி, பால்கனியின் தரைத் தளத்தில் புத்தம் புது ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன. மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டியின் மேற்பரப்பில் ஐநூறு ரூபாய் பரப்பப்பட்டிருந்தன.
இதனிடையே, காவல்துறையினரின் சோதனையின் போது பிரணாப்பின் மனைவி திடீரென வெளியே ஓடிவந்து, வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்துவிட்டதாக கூச்சலிட்டதால் அப்பகுதி மக்கள் வீட்டின் முன்பு கூடிவிட்டனர். கூட்டத்தை உள்ளூர் காவல்துறையினர் கலைத்தனர்.
சுமார் 21 மணி நேர சோதனைக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட பணத்தை சாக்குகள், இரும்பு பெட்டிகளில் காவல்துறையினர் நிரப்பினர். ஆனால், அவர்களால் பணத்தை எண்ண முடியவில்லை. இதையடுத்து, பணம் எண்ணும் இயந்திரங்கள் மூன்று கொண்டு வரப்பட்டு ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன. இதில் மொத்தம் ரூ.24 கோடி ரொக்க பணம் இருப்பது தெரியவந்தது. இதுதவிர பல லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், வங்கி முதலீட்டு பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே, வீட்டில் இருந்து தப்பியோடிய பொறியாளர் பிரணாப்பை கைது செய்த காவல்துறையினர், சோதனையின்போது தாக்க முயன்ற பிரணாப்பின் மகன் தமோயுவையும் கைது செய்தனர்.
 

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்