சென்னையில் பைக் மோதியதில் தொழிலாளி பலி

சென்னையில் பைக் மோதியதில் தொழிலாளி பலி

சென்னையில் பைக் மோதியதில் தொழிலாளி பலி
 
சென்னையில், அதிவேகமாக வந்த கவாஸாகி சூப்பர் பைக் கட்டுப்பாட்டை இழந்து சைக்கிள் மீது மோதியதில், அதனை ஓட்டி வந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பைக்கை நண்பரிடமிருந்து இரவல் வாங்கி அதிவேகத்தில் ஓட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உயிர் பலி வாங்கிய அந்த கவாஸாகி சூப்பர் பைக், மினி டிரக் மீது சுக்குநூறாக நொறுங்கியது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
விபத்து
சென்னை, தாம்பரம் அருகே சேலையூரில் பாரத் பல்கலைகழக அகரம் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. தோழிகளிடம் தங்களது சாகத்தை காட்டுவதற்காக, பைக்கை எடுத்துச் சென்றபோதுதான் விபத்து நிகழ்ந்துள்ளது.
இரவல் பைக்
பவித்ரன் என்பவருடைய பைக்கை அவரது நண்பரான ராஜி கணேஷ்[17] என்பவர் எடுத்து ஓட்டியுள்ளார். அவரது பின்னால், ஆகாஷ்[15] என்பவர் அமர்ந்து சென்றுள்ளார். இருவரும் பள்ளி மாணவர்கள். அதிவேகத்தில் ஓட்டியதால் பைக்கை கட்டுப்படுத்த தெரியாமல், விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ராஜி கணேஷ்.
உயிரிழந்த சோகம்
சூப்பர் பைக் மோதியதில் வீட்டிற்கு மதிய உணவு சாப்பிடுவதற்காக சைக்கிளில் சென்ற சுபா ரெட்டி[30] என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த பகுதியில் மெக்கானிக் கடை வைத்திருக்கிறார். இளைஞர்களின் செயலால், ஒரு அப்பாவி உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது.
படிப்பினை
அதிவேக சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கு பயிற்சி தேவை என்பதோடு, ஆரம்ப நிலைகளில் மிகுந்த கவனமும், நிதானமும் தேவை. மேலும், இதுபோன்று, சூப்பர் பைக்குகளை இரவல் தருவதும் இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணமாகிவிடுகிறது.
லைசென்ஸ் சிஸ்டம்
நம் நாட்டின் ஓட்டுனர் உரிமம் வழங்கும் நடைமுறை கடுமையாக்கப்படுவதோடு, சரியான விழிப்புணர்வு இல்லாததும் குறையாக இருக்கிறது. இதுபோன்று பொது சாலையில் பைக் ரேஸ் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை தரும் வகையில் சட்டங்களை உருவாக்குவதும் அவசியமாகிறது.
அதிவேக பைக்
விபத்தில் சிக்கிய பைக் மாடல் கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 14ஆர். உலகின் 1,441சிசி எஞ்சின் கொண்ட இந்த பைக் ரூ.17.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
 

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்