ரேஷன்கார்டு முறைகேடுகளை தடுக்க விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு

ரேஷன்கார்டு முறைகேடுகளை தடுக்க விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு

ரேஷன்கார்டு முறைகேடுகளை தடுக்க விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு திட்டங்களையும் மத்திய அரசு கம்ப்யூட்டர் மயப்படுத்தி வருகிறது. பொதுவினியோக முறையில் உள்ள குடும்ப அட்டை எனப்படும் ரேசன் கார்டுகளையும் டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இது குறித்து மத்திய பொது வினி யோத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பொது வினியோகமுறையில் உள்ள முறைகேடுகள், குறைபாடுகள் உள்ளிட்டவற்றைகளையும் வகையில் ரேஷன்கார்டுகளை டிஜிட்டல் மயப்படுத்தும் பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து விட்டது.
 
ஏற்கனவே 6 மாநிலங்களில் பொது வினியோக முறைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு குடோன்களில் இருந்து ரேசன்கடைகளுக்கு செல்லும் பொருட்கள் கண்காணிக்கப்படுகின்றன. ஏறக்குறைய 92 சதவீதம் முடிந்ததுள்ள இந்த பணியில், விரைவில் ஆந் திரா, பீகார், குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, சத்தீஷ்கர் ஆகியவற்றிலும் நிறைவு செய்வதன் மூலம் பொது வினியோகமுறையில் 100 சதவீத டிஜிட்டல் மயபணிகள் இன்னும் 6 அல்லது 7 மாதத்தில் முடிக்கப்படும். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பொது வினியோக முறையில் ஆதார் இணைக்கும் பணிகள் 98 சதவீதமும், டெல்லியில் 100 சதவீதமும், இமாச்சலபிரதேசம்,
 
சண்டிகர், புதுச்சேரி, கேரளாவில் 80 சதவீதமும் முடிவடைந்துள்ளன. ஆதாரை இணைக்கும் பணிகள் முழுமையடைந்து விட்டால், பொது வினியோக முறையில் முறைகேடுகள் முழுமையாக தடுக்கப்பட்டுவிடும். பயனாளிகளுக்கு பொருட்கள் நேரடியாக கிடைப்பது உறுதி செய்யப்படும்.
 
இந்தியாவில் மானிய முறையில் வழங்கப்படும் பொருட்களில் 44 சதவீதம் பொருட்கள் வெவ்வேறு வழிகளில் முறை கேடாக கொண்டு செல்லப்படுகின்றன என்று மதிப்பிடப்படுகிறது. தேசிய உணவு பாது காப்பு சடட்த்தின் கீழ் பொது வினியோக முறைகள் முறைப்படுத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 30க்குள் இவற்றை முழுமைபடுத்த மாநிலங்களுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. ரேசன் கார்டுகளை கம்ப்யூட்டர்களில் பதிவு செய்து ஆதார் எண்ணை அதனுடன் இணைப்பதன் மூலம் உணவு பொருட்களுக்கான மானியம் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்